கூகுள் பிக்சல், நோக்கியா உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.!
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.20,000 விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பிளிப்கார்ட் வலைதளத்தில் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி பல்வேறு நிறுவனங்களின் முன்னனி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி டிவி, லேப்டாப், டேப்லெட் போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்து. இந்த சிறப்பு சலுகை வரும் 8-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 8 சிரோக்கோ:
நோக்கியா 8 சிரோக்கோ சாதனத்திற்கு தற்சமயம் ரூ.18000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இந்த சாதனத்தை வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல்:
கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.5000 விலைகுறைக்கப்பட்டு ரூ.34,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எல்ஜி ஜி7 தின்க்:
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.20,000 விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.17,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சியோமி போகோ எஃப்1:
8ஜிபி ரேம் கொண்ட சியோமி போகோ எஃப்1 மாடலுக்கு ரூ.3000 விலைகுறைக்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட சியோமி போகோ எஃப்1 ரூ.3000 விலைகுறைக்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட சியோமி போகோ எஃப்1 ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் பவர்:
மோட்டோரோலா ஒன் பவர் சாதனத்திற்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது,பின்பு பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.13,850 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வங்கி கார்டுகள்
மேலும் ரியல்மி, அசுஸ், ஹானர் போன்ற பல்வேறு ஸ்மர்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு தேர்வு
செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி பிளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி, கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications