பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் சேவிங் டேஸ் விற்பனை ஆனது வரும் டிசம்பர் 18, வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை வரை தொடரும். மேலும் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனையில் கீழ் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் - ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர், ரியல்மி 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 41 போன்ற அட்டகாசமான சாதனங்களும் அடங்கும்

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ கார்டுகளின் மீதான சிறப்பு சலுகைகள் மற்றும் 10 சதவீதம் தள்ளுபடி போன்றவைகளும் அணுக கிடைக்கும். பின்பு வழக்கம் போல பிளஸ் உறுப்பினர்களுக்கு இந்த சிறப்பு விற்பனைக்கு ஆரம்ப அணுகல் சற்று முன்னதாகவே வழங்கப்படும். அதாவது இது அவர்களுக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 17, மதியம் 12 மணி (நண்பகல்) முதல் அணுக கிடைக்கும்.

ரியல்மி
பிளிப்கார்ட் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், 8 ஜிபி ரேம் வரை வழங்கும் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் வேரியண்ட்களின் விலை ரூ.12,999 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமீபத்திய விலை வீழ்ச்சிக்குப் பிறகு,ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி+ 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக இருந்தது. பின்பு இதேபோல ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999-க்கும், ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ரூ.11,999-க்கும் வாங்க கிடைக்கும்.

சாம்சங்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்41 மாடலின் விலை இந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.15,499 ஆக இருக்கும் உடன் வாடிக்கையாளர்கள் எக்ஸசேன்ஜ் சலுகையின் கீழ் ரூ.1,000 வரையிலான தள்ளுபடியையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன்
பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை நீங்கள் ரூ.38,999 முதல் வாங்க முடியும். உடன் ரூ.6,500 முதல் நோ காஸ்ட் EMI விருப்பங்களும் அணுக கிடைக்கிறது. அதேபோல் இந்த பிரீமியம் போனின் 64ஜிபி வேரியண்ட் ஆனதுரூ.44,900-க்கும், 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.49,900 க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் எஸ்இ மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது தற்போது ரூ.35,900-க்கு வாங்க கிடைக்கிறது. பின்பு இதே மாடல் சிறப்பு விற்பனையின் போது ரூ.32,999-க்கு வாங்க கிடைக்கும்.

எல்ஜி
இந்த சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட எல்ஜி ஜி 8 எக்ஸ் தின்க்யூ மாடலை ரூ.27,990-க்கு வாங்க முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 2 எஃப் மாடலை ரூ.15,990-க்கு வாங்க முடியும். அதேபோல் ஒப்போ எஃப் 15 ஸ்மார்ட்போனை ரூ.14,990-க்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications