Flipkart Big Savings Days Sale 2021: குறைந்த விலையில் ஐபோன்களை வாங்க அருமையான வாய்ப்பு.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் எனும் சிறப்பு விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகைள்
வழங்கப்பட இருக்கிறது.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை நடக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள்பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் Flipkart Plus உறுப்பினர்களுக்கு ஜூலை 24 முதலே இந்த சிறப்பு விற்பனைக்கு அணுகல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட அந்த ஐபோன்கள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் எஸ்இ (2020) சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் எஸ்இ (2020) சாதனத்தின் உண்மை விலை ரூ.39,9000-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின்
மூலம் ரூ.28,999-க்கு வாங்க முடியும்.
அதேபோல் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தின் உண்மை விலை ரூ.47,900-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.67,999-க்கு வாங்க முடியும்.

குறிப்பாக ஐபோன் 12 சாதனம் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் A14 பயோனிக் சிப்செட் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர இந்த சாதனத்தின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அதேபோல் மிகவும் பிரபலமான ரியல்மி சி20, போக்கோ எக்ஸ் 3 ப்ரோ, ரியல்மி எக்ஸ்7 5ஜி, மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications