கையும் ஓடல., காலும் ஓடலயே- ரூ.22,000 போன் வெறும் ரூ.14,000 விலையில்: பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை!
பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை ஏப்ரல் 12 (நாளை) முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனைச் சலுகைகள் தற்போது பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு நேரலையில் இருக்கிறது. பிளிப்கார்ட் இந்த தள்ளுபடி தினங்களில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட்களை பயன்படுத்தி சாதனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் அறிவித்துள்ள பிக் சேமிப்பு தின விற்பனை
பிளிப்கார்ட் அறிவித்துள்ள பிக் சேமிப்பு தின விற்பனை ஏப்ரல் 14 முதல் நேரலையில் இருக்கும், இந்த தள்ளுபடி தின அறிவிப்பில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங், ரெட்மி, மோட்டோ உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு இந்த அறிவிப்பு தற்போதே கிடைக்கிறது. மேலும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் உடனடி தள்ளுபடியை பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி
பிளிப்கார்ட் அறிவித்துள்ள பிக் சேமிப்பு தின விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனுக்கு சிறந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.22,999 என விற்கப்பட்ட இந்த சாதனம் தற்போது ரூ.15,999 என கிடைக்கிறது. தற்போதைய தள்ளுபடி தினத்தில் இந்த சாதனம் ரூ.14,249 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் வாங்கும் போது ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்ட், கிரெட் மற்றும் டெபிட் பரிவர்த்தனைகளில் வாங்கும் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகனம் 750ஜி எஸ்ஓசி சிப்செட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்போடு வருகிறது.

ரெட்மி நோட் 10டி 5ஜி
பிளிப்கார்ட் அறிவித்துள்ள பிக் சேமிப்பு தின விற்பனையில் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 என கிடைக்கிறது. இந்தியாவில் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 10டி 5ஜி இருக்கிறது. இந்த சாதனம் தற்போதைய தள்ளுபடி தின விற்பனையில் ரூ.10,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கூடுதலாக பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவோடு, 48 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 12 ஆதரவோடு கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்
பிளிப்கார்ட் அறிவித்துள்ள பிக் சேமிப்பு தின விற்பனையில் மோட்டோ எட்ஜ் 20 ஃப்யூஷன் சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ரூ.25,999 என விற்கப்பட்ட சாதனம் வெறும் ரூ.23,199 என கிடைக்கிறது. ஆனால் தற்போது பிக் சேமிப்பு தின விற்பனையில் இந்த சாதனம் ரூ.19,499 என வாங்கலாம். இந்த சாதனத்துக்கு எந்த பரிமாற்ற சலுகையும் பட்டியலிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது 108 எம்பி குவாட் கேமரா அமைப்போடு 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,999 என கிடைக்கிறது. ஆனால் இந்த சலுகை தின தள்ளுபடியாக போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி ஆதரவு, ஆண்ட்ராய்டு 11, 8ஜிபி ரேம் மற்றும் 50 எம்பி டூயல் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி
பிளிப்கார்ட் ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.27,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.24,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது தற்போதைய தள்ளுபடி விலையாக ரூ.19,999 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் இந்த ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 920 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் 50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications