ரூ.10000 நேரடி தள்ளுபடி.. தட்டி தூக்க சரியான டைம்! 13 ஜிபி ரேம்.. 3 கேமரா.. 5ஜி எல்லாமே இருக்கு.!
பிளிப்கார்ட் நிறுவனம் அதன் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days sale) விற்பனையை இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி (Infinix Zero 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத விலையில் அதிரடியாக கிடைக்கிறது.
Infinix ZERO 5G 2023 ஸ்மார்ட்ஃபோன், Flipkart இல் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த மிட்-ரேஞ் செக்மென்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சிறந்த ஒன்றாகும். பட்ஜெட் செக்மென்ட்டில் உங்களுக்கு தேவையான அணைத்து அம்சங்களையும் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Infinix ZERO 5G இந்த 2023 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பெஸ்ட் சாதனம் என்பதை அறிந்துகொள்ள, இதன் அம்சங்களை நீங்கள் ஒருமுறை பார்த்தால் போதும். தயக்கமே இல்லாமல் நீங்கள் இதை வாங்க என்னென்ன காரணங்கள் நிறைந்துள்ளதென்று பார்க்கலாம் வாருங்கள். இதன் அம்சத்தை பற்றி பேசுகையில், இது 6.78' இன்ச் முழு HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 920 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் தீவிரமான செயல்பாடுகளை கூட நீங்கள் மிகவும் ஸ்மூத்தாக செய்து முடிக்கலாம். உங்கள் வேலைகளை விரைவாகவும் முடிக்கலாம். மேம்படுத்தப்பட்ட MediaTek Dimensity 920 சிப்செட்டை பயன்படுத்தி, கேமிங் முதல் டவுன்லோட் வரை அனைத்தையும் வேகமாக செய்து முடிக்கலாம்.
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் கூடுதலாக 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்சத்தை ஆதரிக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு தடையில்லாத, ஹேங் ஆகாத ஸ்மார்ட்போன் அனுபவத்தை உங்களால் அனுபவிக்க முடியும். இந்த போன் மல்டிடாஸ்கிங்கை மிகவும் சாமர்த்தியமாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்கிறது.

இது 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜ்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது சுமார் 30 நிமிடங்களில் 50% சார்ஜ்ஜை எட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், 50MP + 2MP + 2MP கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது 16MP செல்பி கேமராவை டூயல் LED பிளாஷ் அம்சத்துடன் கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 12 உடன் XOS 12 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது பிரீமியம் வீகன் லெதர் பினிஷ் கொண்ட ரியர் பேனல் வடிவமைப்புடன் வருகிறது.
இந்த Infinix Zero 5G ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது ரூ.24,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில், இந்த போனின் மீது 40% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போனின் விலை மீது ரூ.10,000 தள்ளுபடி கிடைத்துள்ளது.
இதன் மூலம் இப்போது இறுதி சிறப்பு விலையாக ரூ.14,999 க்கு இந்த போன் வாங்க கிடைக்கிறது. இது கோரல் ஆரஞ்சு (Coral Orange), பேர்லி வைட் (Pearly White) மற்றும் சப்மரைன்னர் பிளாக் (Submariner Black) ஆகிய 3 நிறங்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








