ரூ. 8,999 விலையில் புது ஸ்மார்ட் டிவி வேண்டுமா? அப்போ இதை உடனே பண்ணுங்க..

|

கோடக் (Kodak) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு கோடக் CA சீரிஸ் மற்றும் 7X ப்ரோ சீரிஸ் தொடர்களில் இருக்கும் ஸ்மார்ட் டிவி மாடல்களை, பிளிப்கார்ட் நிறுவனத்தின் 'தி பிக் சேவிங் டேஸ் சேல்ஸ்' (Flipkart The Big Saving Days Sale) விற்பனையின் போது மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் சிறப்புச் சலுகையாக நீங்கள் புத்தம் புதிய கோடக் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ. 8999 விலையில் வாங்க முடியும்.

Flipkart The Big Saving Days Sales விற்பனை

Flipkart The Big Saving Days Sales விற்பனை

Flipkart The Big Saving Days Sales விற்பனை அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது. சரியாக மே 27, தேதி முதல் இந்த விற்பனை துவங்குகிறது. மே 26 அன்று ஆரம்ப அணுகலுடன் இந்த விற்பனை தொடங்குகிறது. 7XPRO டி.வி.களில் கோர்டெக்ஸ் ஏ 53 குவாட் கோர் சிப்செட் மற்றும் மாலி 450 ஜி.பீ.யூ மற்றும் 500 நிட்ஸின் டிஸ்பிளே பிரகாசம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை தெளிவான படத் தரத்தை சரியான மாறுபாட்டுடன் காண அனுமதிக்கின்றது.

Chromecast உடன் இணைந்து ஸ்மார்ட் உலக அம்சங்கள்

Chromecast உடன் இணைந்து ஸ்மார்ட் உலக அம்சங்கள்

சிறந்த பார்வை மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், இந்த அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் Chromecast உடன் இணைந்து ஸ்மார்ட் உலகத்துடன் இணைக்கின்றது. புதிய 42 இன்ச் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், எம்எக்ஸ் பிளேயர், ஜீ 5 மற்றும் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 30W கொண்ட சக்திவாய்ந்த ஆடியோ அனுபவத்தையும் வழங்குகிறது.

இது செவ்வாய் கிரகம் இல்லை.. நம்முடைய பூமி தான்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த இடம் எங்கிருக்கிறது தெரியுமா?இது செவ்வாய் கிரகம் இல்லை.. நம்முடைய பூமி தான்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த இடம் எங்கிருக்கிறது தெரியுமா?

4 கே எச்டிஆர் 10 டிஸ்ப்ளே

4 கே எச்டிஆர் 10 டிஸ்ப்ளே

கோடக் சிஏ தொடரில் 4 கே எச்டிஆர் 10 டிஸ்ப்ளே, டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இது யூ.எஸ்.பி 2.0, எச்.டி.எம்.ஐ ஏ.ஆர்.சி / சி.இ.சி மற்றும் புளூடூத் வி .5.0 (சமீபத்திய பதிப்பு) உடன் பல இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. CA தொடர் சமீபத்திய Android 10 இடைமுகத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் இன்னும் ஸ்மார்ட்டாக செயல்பட இதில் கூகிள் அசிஸ்டன்ட் சேவையும் வழங்கப்டுள்ளது.

ரூ. 8,999 முதல் புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வாய்ப்பு

ரூ. 8,999 முதல் புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வாய்ப்பு

இந்த சிறப்பு விற்பனையின் போது உங்களுக்கு இன்னும் கூடுதலான சலுகைகளும் கிடைக்கிறது. எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம் என்று கோடக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த விற்பனையில் 24HDX100S டிவி மாடல் வெறும் ரூ. 8,999 விலையில் கிடைக்கிறது. அதேபோல், 32HDX900s டிவி மாடல் ரூ. 11,999 என்ற விலையிலும், 32HDX7XPRO டிவி மாடல் ரூ. 13,999 விலையிலும் கிடைக்கிறது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

உயர் திறன் கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை என்ன?

உயர் திறன் கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை என்ன?

அதேபோல், 40FHDX7XPRO டிவி மாடல் ரூ. 19,499 என்ற விலையிலும், 42FHDX7XPRO டிவி மாடல் ரூ. 20,999 விலையிலும், 43FHDX7XPRO டிவி மாடல் ரூ. 22,499 விலையிலும், 43UHDX7XPRO டிவி மாடல் ரூ. 24,999 விலையிலும், 43CA2022 டிவி மாடல் ரூ. 27,999 விலையிலும், 50UHDX7XPRO டிவி மாடல் ரூ. 31,999 விலையிலும், 50CA7077 டிவி மாடல் ரூ. 31,999 விலையிலும், 55UHDX7XPRO டிவி மாடல் ரூ. 33,999 விலையிலும், 55CA0909 டிவி மாடல் ரூ. 36,999 விலையிலும் மற்றும் 65CA0101 டிவி மாடல் ரூ. 54999 விலையிலும் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days Sale Kodak CA Series and 7XPRO series will be available from Rs 8999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X