Flipkart Big Saving Days Sale: ஒன்னு ரெண்டுனா பரவால, அனைத்துக்கும் தள்ளுபடி- இங்க பாருங்க!
Flipkart Big Saving Days விற்பனையில் பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சலுகை தின விற்பனையானது பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு தற்போதே நேரலையில் இருக்கிறது. அனைவருக்குமான விற்பனையாக ஜூலை 23 நள்ளிரவு முதல் நேரலைக்கு வரும். இதில் கவனிக்கத்தக்க விஷயமும் இருக்கிறது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை ஜூலை 23 நள்ளிரவு முதல் தொடங்குகிறது. அதே சமயத்தில் அமேசான் பிரைம் டேஸ் விற்பனையும் தொடங்குகிறது. இரண்டு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல்வேறு கேட்ஜெட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கிறது. நீங்கள் புது ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் தயாராக இருங்கள்.

நாளை நள்ளிரவு முதல் தொடங்கும் விற்பனை
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு என தற்போதே பிரத்யேகமாக நேரலையில் இருக்கிறது. அனைவருக்குமான விற்பனையாக ஜூலை 23 (நாளை) நள்ளிரவு முதல் தொடங்கும். இந்த சலுகை தின விற்பனையில் பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களும் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும்.

கூடுதலாக வங்கி சலுகைகளும் உண்டு
ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் பல ஐபோன் மாடல்கள் தற்போது பிளிப்கார்ட் சலுகை தின அறிவிப்பில் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டின் பிரத்யேக தள்ளுபடியுடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் பேங்க், சிட்டி பேங்க், கோடக் பேங்க் மற்றும் ஆர்பிஎள் பேங்க் உள்ளிட்ட பேங்க்களுடன் கூட்டு சேர்ந்து பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்குகிறது.

ப்ளஸ் உறுப்பினருக்கு என பிரத்யேக விற்பனை
பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் நேரலையில் இருக்கும் காரணத்தால் இதன்மூலம் பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் தெரிய வந்திருக்கிறது. ப்ளஸ் உறுப்பினராக நீங்கள் இல்லாத பட்சத்தில் இந்த தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் நாளை நள்ளிரவு முதல் வாங்கலாம்.

பிரத்யேக தள்ளுபடி விலையில் ஐபோன் 12
ஐபோன் 12 தற்போது தள்ளுபடி விலையில் ரூ.52,999 என கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் உண்டு. சிட்டி பேங்க், கோடக் பேங்க் அல்லது ஆர்பிஎல் பேங்க் கார்ட்கள் மூலம் ஷாப்பிங் செய்தால் கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் ஐபோன் 12 மாடலை வெறும் ரூ.51,999 என வாங்கலாம்.

பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 ஆக இருக்கிறது. தள்ளுபடி விலையில் வாங்க வேண்டும் என்றால் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையை அணுக வேண்டும். 6.1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே, டூயல் 12 எம்பி ரியர் கேமரா மற்றும் 12 எம்பி செல்பி கேமரா உடன் ஏ14 பயோனிக் சிப் மூலம் ஐபோன் 12 இயக்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி60
மோட்டோ நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போனாக பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி60 கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999 என பிக் சேவிங் டேஸ் விற்பனையில் வாங்கலாம். பிளிப்கார்ட்டில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,199 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,999 என வாங்கலாம்.
இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 32 எம்பி செல்பி என மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

பெரும் தள்ளுபடி விலையில் சியோமி 11ஐ ஸ்மார்ட்போன்
Flipkart Big Saving Days விற்பனையில் பல சியோமி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சியோமி 11ஐ ஸ்மார்ட்போன் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 என இருந்த நிலையில் தற்போது ரூ.19,999 என கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஐபோன் 11 வாங்க சரியான நேரம்
Flipkart Big Saving Days விற்பனையில் ஐபோன் 11 அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஐபோன் 11 மாடல் பிளிப்கார்ட்டில் ரூ.47,199 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சலுகை தின விற்பனையில் ரூ.39,999 என வாங்கலாம். மிகவும் குறைந்த விலையில் ஐபோன் 11 வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும். இந்த விலையில் வங்கி சலுகைகளும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மேம்பட்ட ஆதரவுடனான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்
Vivo T1 44W ஸ்மார்ட்போன் ரூ.15,990 ஆக இருந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ரூ.13,499 என மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. இதில் 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி என டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் ஆதரவோடு இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ஸ்மார்ட்போன்களில் பிரதான ஒன்று
Redmi Note 10 Pro ஸ்மார்ட்போனானது ரெட்மி தொடரில் மிகவும் புகழ்பெற்ற ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.16,999 என இருக்கும் நிலையில் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ரூ.13,999 என கிடைக்கிறது. 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் 64 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 2 எம்பி என குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications