Flipkart Big Saving Days sale: ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.!
பிளிப்கார்ட் தளத்தில் தொடர்ந்து பல சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் வரும் மே 2-ம் தேதி பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் மே 7-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட்டுகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ப்ளூடூத்ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

10 சதவீத உடனடி தள்ளுபடி
மேலும் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் எச்.டி.எஃப்.சி வங்கி வழியாக நிகழும் ப்ரீபெய்ட்பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின்
பட்டியலைப் பார்ப்போம்.

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள்
- இந்த சிறப்பு விற்பனையில் கேலக்ஸி எஃப்62 மாடல் ரூ.17,999-விலைக்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999-ஆகும்.
- சாம்சங் கேலக்ஸி எஃப்41 மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். அதாவது அசல் விலையில் இருந்துரூ.2000 வரை தள்ளுபடியை பெறுகிறது.
- கேலக்ஸி எஃப்12 மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த சாதனத்தை ரூ.9,999-விலையில்வாங்க முடியும்.
- ஐபோன் 11 மாடலுக்கு ரூ.7000 தள்ளுபடி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தைரூ.44,999-க்கு வாங்க முடியும்.
- ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த சாதனத்தை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.
- ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி மாடலை ரூ.24,999-விலையில் வாங்க முடியும். இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.31,999 ஆகும்.
- ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5 மாடலை ரூ.27,999-விலையில் வாங்க முடியும். இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.29,999 ஆகும்.

இதுதவிர போக்கோ எம்3, ரியல்மி 8,ரியல்மி சி21, ரெட்மி நோட் 9, ஒப்போ எஃப்17 ப்ரோ, ரியல்மி எக்ஸ் 7 5ஜி, டெக்னோ கேமன் 16, ரியல்மி 7, மோட்டோ இ7 பவர், இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ், இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8ஐ உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப் மாடல்களுக்கு 40 சதிவிகிதம் தள்ளுபடியும், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மற்றும் 8-வது தலைமுறை ஆப்பிள் ஐபாட் சாதனங்களையும் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். மேலும் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8.0 மற்றும் ஹானர் பேட் 5 போன்ற மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications