Flipkart Big Saving Days Sale: டிவி, லேப்டாப், போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
அமேசான் பிரைம் டே விற்பனை வரும் ஜூலை 23 அன்று தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அமேசான் நிறுவனம் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப் என பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்
அதேபோல் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் Flipkart Big Savings Days Sale எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஆனது ஜூலை 23 -ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் தள்ளுபடி
பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், டேப்லெட்,ஸ்மார்ட் டிவி எனப் பல சாதனங்களை விலைகுறைப்பில் வாங்கலாம். அதேபோல் இந்த Flipkart Big Saving Days Sale விற்பனையில் ஆக்ஸிஸ் பேங்க், சிட்டி பேங்க்,
ஆர்பிஎல் பேங்க், கோடக் பேங்க் போன்ற வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

சூப்பர் ஸ்மார்ட்போன்கள்
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபோன் 11, மோட்டோ 31, ஒப்போ ரெனோ 5 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். இதுதவிர விவோ, ரியல்மி, ரெட்மி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மவுஸ் மற்றும் கீபோர்டுகள்
மவுஸ், கீபோர்டுகள், routers போன்ற சாதனங்களை நீங்கள் வாங்க விரும்பினால் இந்த Flipkart Big Saving Days Sale-ஐ தவறவிடாதீர்கள். அதாவது இதுபோன்ற சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை சலுகையை பெறமுடியும்.

டிவிகளுக்கு சூப்பர் சலுகை
உங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை தேடுகிறீர்களா, கவலை வேண்டாம் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் நீங்கள் கம்மி விலையில் ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும். அதாவது இந்த சிறப்பு விற்பனையில் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிகளை கூட ரூ.20,749-விலையில் வாங்க முடியும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர்கள்
மேலும் இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஏர் கண்டிஷனர்களுக்கு 55 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர்கள் போன்ற சாதனங்ளையும் கம்மி விலையில் வாங்க முடியும் என்று பிளிப்கார்ட் நிறுவவனம் கூறியுள்ளது.

டேப்லெட் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு
மாணவர்களுக்கு பிடித்த டேப்லெட் மாடல்களுக்கும் பிளிப்பார்ட் சிறப்பு விற்பனையில் சூப்பர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது லெனோவா ஆப்பிள், சாம்சங், ரியல்மி, மோட்டோரோலா ஆகிய நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ்
பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் ஹெட்ஃபோன்கள், இயர்பட்ஸ் போன்ற சாதனங்களுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனங்களை 45 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இதுதவிர முன்னணி நிறுவனங்களின் ஸ்பீக்கர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சூப்பர் தள்ளுபடி
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஃபிட்னஸ் பேண்டுகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 65 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்பை நீங்கள் மிஸ்பண்ணக் கூடாது. கண்டிப்பாக இந்த சிறப்பு விற்பனை உங்களுக்கு பயனுள்ளவகையில் இருக்கும்.

லேப்டாப்
முன்னணி நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களை பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 40 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். பின்பு டெஸ்க்டாப்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரிண்டர்களுக்கும் 75 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் ஜூலை 23-ம் தேதி நீங்கள் வாங்க நினைத்த சூப்பர் கேஜெட்டுகளை குறைந்த விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications