Home
News

மே.5 முதல் மே.10 வரை.. Flipkart பிக் சேவிங் டேஸ் விற்பனை.. 8 போன்கள் மீது முரட்டு ஆஃபர்.. இதோ லிஸ்ட்!

பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டின் (Flipkart) அடுத்த சிறப்பு விற்பனை எப்போது என்கிற காத்திருப்பில் நீங்கள் இருந்தால்.. அந்த காத்திருப்பு கிட்டத்தட்ட்ட முடிந்து விட்டது என்றே கூறலாம். ஏனென்றால் பிளிப்கார்ட் அதன் அடுத்த பிக் சேவிங் டேஸ் (Big Saving Days) விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் உள்ள டீஸர் பக்கமானது, இந்த சிறப்பு விற்பனை வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி அடுத்த 6 நாட்களுக்கு.. அதாவது மே 10 ஆம் தேதி வரை நீளுமென்பதை வெளிப்படுத்துகிறது. கூடவே என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆஃபர் விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்கிற விவரங்களையும் வெளிப்படுத்துகிறது.

Flipkart பிக் சேவிங் டேஸ்: 8 போன்கள் மீது முரட்டு ஆஃபர்.. இதோ லிஸ்ட்!

நடக்கவிருக்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது கூகுள் பிக்சல் 6ஏ (Google Pixel 6a) ஸ்மார்ட்போனானது ரூ.25,999 க்கும், ரியல்மி ஜிடி நியோ 3டி (Realme GT Neo 3T) ஸ்மார்ட்போன் ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro) ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் சலுகைகளை சரியாக பயன்படுத்தினால் அதை ரூ.20,999 க்கு வாங்க முடியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடன் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 10 Pro Plus 5G) ஸ்மார்ட்போனானது ரூ. 22,999 க்கும், பட்ஜெட் போனான ரியல்மி சி55 (Realme C55) ஆனது ரூ.7,999 க்கும் விற்பனை செய்யப்படும்.

பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 13 (iPhone 13) மாடலானது 'க்ரேஸியஸ்ட் ப்ரைஸின்' (Craziest Price) கீழ் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியாக என்ன விலைக்கு கிடைக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இது ரூ.61,999 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விற்பனையின் போது மோட்டோரோலாவின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனான மோட்டோ இ13 (Moto e13) ஆனது வெறும் ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும். மற்றொரு கூகுள் போனான பிக்சல் 7 (Pixel 7) ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும்.

இது தவிர சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G), சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 3 (Samsung Galaxy Z Flip 3) போன்ற போன்கள் மீதும் தள்ளுபடி கிடைக்கும். மேலதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த விவரம் மே 1 ஆம் தேதி முதல் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு விற்பனையின் போது, நேரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு தயாரிப்பின் மீதும் பிரத்யேக வங்கி சலுகைகள் (Bank Offers) மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் (Exchange Offers) மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) விருப்பங்கள் போன்றவைகளும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மேலும் (வழக்கம் போல) பிளிப்கார்ட்டின் பிளஸ் மெம்பர்ஷிப்பின் (Flipkart Plus Membership) கீழ் உள்ளவர்கள், மே 5 ஆம் தேதி தொடங்கும் பிக் சேவிங் டேஸ் விற்பனையை ஒரு நாளுக்கு முன்னதாகவே அணுகலாம். அதாவது பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்கள் மே 4 ஆம் தேதி முதலே இந்த சிறப்பு விற்பனைக்கான பிரத்யேக அணுகலை பெறுவார்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days Sale Dates Announced Heavy Offers These 8 Smartphones Check List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X