Flipkart Big Saving Days Sale: அள்ளு அள்ளு, பாதிக்கு பாதி விலையில் கேட்ஜெட்கள்!

|

Flipkart Big Saving Days விற்பனை அதீத தள்ளுபடியுடன் நேரலையில் இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இது மிக சரியான நேரமாகும்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

நிறுவனம் நிர்ணயித்த தள்ளுபடியுடன் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதாவது ஆக்சிஸ் பேங்க், சிட்டி பேங்க், மஹிந்திரா பேங்க் மற்றும் ஆர்பிஎல் பேங்க் கார்ட்களுக்கு உடனடி 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Samsung Galaxy Watch 4

Samsung Galaxy Watch 4

கேட்ஜெட்களின் பிரதான பயன்பாடாக ஸ்மார்ட்வாட்ச் உருவெடுத்து இருக்கிறது. உடல்நல ஆரோக்கிய கண்காணிப்பு முதல் பல்வேறு முக்கிய நன்மைகளை ஸ்மார்ட் வாட்ச்கள் வழங்குகிறது. ஸ்மார்ட்வாட்ச்களில் சிறந்த அம்சங்கள் கொண்ட Samsung Galaxy Watch 4 தற்போது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

40 மணிநேர பேட்டரி பேக் அப்

40 மணிநேர பேட்டரி பேக் அப்

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 ஆனது ரூ.15,000 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.12,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 40 மணிநேர பேட்டரி பேக் அப் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Lenovo IdeaPad 1

Lenovo IdeaPad 1

Lenovo IdeaPad 1 ஆனது 15.6 இன்ச் டிஸ்ப்ளே அளவுடன் கிடைக்கிறது. IdeaPad மாடல் லேப்டாப்கள் அனைத்தும் கண்கவர் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. Lenovo IdeaPad 1 ஆனது ரூ.60,090 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் ரூ.37,990 என கிடைக்கிறது.

உடனடி கேஷ்பேக் சலுகை

உடனடி கேஷ்பேக் சலுகை

Lenovo IdeaPad 1 (15ADA7) ஆனது மெல்லிய பெசல்களுடன் லேசான எடையைக் கொண்டிருக்கிறது. கூடுதலாக உடனடி கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த லேப்டாப்பை ஆக்சிஸ் பேங்க், கோடக் மஹிந்திரா பேங்க் அல்லது ஆர்பிஎல் பேங்க் கார்ட் மூலம் பணம் செலுத்தி வாங்குவதன் மூலம் இன்னும் அதிக பணத்தை சேமிக்கலாம்.

50-இன்ச் VU சினிமா டிவி

50-இன்ச் VU சினிமா டிவி

ரூ.65,000 க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட் டிவி தற்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை 2022 இல் ரூ.39,999 என கிடைக்கிறது என்றால் உண்மையாகவே வரவேற்கத்தக்க ஒன்று தானே. 50 இன்ச் VU சினிமா டிவி சீரிஸ் ஆனது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 100 வாட்ஸ் சவுண்ட் பார் உடன் இந்த டிவி கிடைக்கிறது. இது மட்டுமில்லை சினிமா தரத்தை மேம்படுத்தி வழங்க பல்வேறு அம்சங்கள் இதில் இருக்கிறது.

அதீத தள்ளுபடியில் ஸ்மார்ட் டிவி

அதீத தள்ளுபடியில் ஸ்மார்ட் டிவி

க்ரோம் காஸ்ட், கூகுள் அசிஸ்டென்ட் என பல உள்ளமைவுகளை இந்த டிவி கொண்டிருக்கிறது. இத்தனை அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.65,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.39,999 என கிடைக்கிறது.

எல்ஜி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி

எல்ஜி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி

LG 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப் ஓஎஸ் டிவியானது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. எல்ஜி UQ7500 மாடல் வெப் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. Vu ஸ்மார்ட்டிவியில் விருப்பம் இல்லை ஏதாவது ஒரு நல்ல பிராண்ட் டிவி வாங்க விருப்பம் இருந்தால் இந்த எல்ஜி டிவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளமைவு

முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளமைவு

எல்ஜி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.49,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.30,990 என கிடைக்கிறது. யூடியூப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளமைவுகளுடன் இந்த டிவி கிடைக்கிறது.

Moto G22

Moto G22

Moto G22 ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.9,999 என கிடைக்கிறது. Moto G22 ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் ரூ.9,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு

50 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு

இந்த ஸ்மர்ட்போன் 4 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 50 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் வங்கி சலுகைகளும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.

Poco M4 Pro

Poco M4 Pro

போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. போக்கோ எம்4 ப்ரோ ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் வெறும் ரூ.12,999 என கிடைக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி96 Soc ஆதரவு

மீடியாடெக் ஹீலியோ ஜி96 Soc ஆதரவு

கூடுதலாக வங்கி சலுகைகளும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது. போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Apple iPhone 12

Apple iPhone 12

Apple iPhone 12 64 ஜிபி வேரியண்ட் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் ரூ.51,999 என கிடைக்கிறது. கூடுதலாக 10% தள்ளுபடி வங்கி சலுகையாக வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Flipkart Big Saving Days Sale Best Gadgets Available with Huge Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X