Home
News

4K டிவி வாங்க பக்காவான நேரம்.. ரூ.28,999 முதல் Samsung, MI டிவி.. Flipkart பிக் சேவிங் டேஸ் ஆஃபர்

சாம்சங் கிரிஸ்டல் 4K (Samsung Crystal 4K) மற்றும் எம்ஐ எக்ஸ் சீரிஸ் 4K (Mi X Series 4K) ஆகிய ஸ்மார்ட் டிவிகளின் விலை பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் (Flipkart Big Saving Days Sale) சேல்ஸில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. யாராவது சிறந்த 4K டிவி வாங்க வெயிட் பண்ணிட்டிருந்த இதுதான் உங்களுக்கான நேரம்.

இப்போதெல்லாம் நேரில் சென்று டிவி வாங்குவதைவிட ஆன்லைனில் வாங்குவதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். ஏனென்றால், டிவி வாங்குவதற்கான நேர விரயமும், பத்திரமாக எடுத்து வருவதற்கான வேலையும் ஆன்லைனில் கிடையாது என்பதால் அதை செய்கின்றனர். நீங்கள் ஆர்டர் செய்தால் மட்டுமே போதும் வீட்டுக்கே வந்து பிட் செய்துவிட்டு, ரிமோட்டை கையில் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

4K டிவி வாங்க பக்காவான நேரம்.. ரூ.28,999 முதல் Samsung, MI டிவி!

இருப்பினும், நேரில் வாங்கினால், விலை கொஞ்சம் குறைவாக கிடைக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இ-காமர்ஸ் தளங்களில் தருவதுபோல ஆஃபர்கள் கிடைக்காது. குறிப்பாக, அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் போன்ற ஆஃபர் நாட்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மிக மிக மலிவான விலையில் கிடைக்கும்.

அந்த வகையில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி நடக்கிறது. இந்த சிறப்பு விற்பனை நாள்களில் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட அனைத்தும் மலிவான விலைகளில் கிடைக்கிறது. குறிப்பாக, டிவிகளில் சாம்சங் கிரிஸ்டல் 4K (Samsung Crystal 4K) மற்றும் எம்ஐ எக்ஸ் சீரிஸ் 4K (Mi X Series 4K TV) ஆகியவற்றின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கிரிஸ்டல் 4K ஸ்மார்ட் டைசன் ( Samsung Crystal Smart Tizen TV ) டிவி அம்சங்கள்: இந்த டிவி 43 இன்ச் எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 4K ரெசொலுஷன் உடன் 60Hz ரெப்ஃரெஷ் ரேட் உள்ளது. ஆடியோவை பொறுத்தவரை இரண்டு 20w ஸ்பீக்கர்கள் உள்ளன. மூன்று ஹெச்டிஎம்ஐ பேர்ட்ஸ் (HDMI Ports), ஒரு யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஒரு ஹெட்போன் போர்ட் (Headphone Port) உள்ளது.

அதேபோல ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), வைஃபை (Wifi), ப்ளூடூத் (Bluetooth) இணைப்பு வசதி உள்ளது. இன்டர்நெட் அக்சஸ் ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டிவியின் எடை 8.1 கிகி எடை இருக்கும். நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் ஆப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விலையை பொறுத்தவரையில், ரூ.29,990ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 வருட வாரண்டி உள்ளது.

இந்த விலையில் நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி 5 சதவிகிதம் ஆஃபர் பெறலாம். அதேபோல பிளிப்கார்ட் பே லேட்டர் மூலம் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். குறிப்பாக ரூ. 4,789 வரையில் பழைய டிவியை எக்சேன்ஜ் செய்து தள்ளுபடி பெறலாம்.

எம்ஐ எக்ஸ் சீரிஸ் 4K (43 inch) (Mi X Series 4K TV) அம்சங்கள்: இந்த டிவி 43 இன்ச் எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 4K ரெசொலுஷன் உடன் 60Hz ரெப்ஃரெஷ் ரேட் உள்ளது. ஆடியோவை பொறுத்தவரை இரண்டு 30w ஸ்பீக்கர்கள் உள்ளன. மூன்று ஹெச்டிஎம்ஐ பேர்ட்ஸ் (HDMI Ports), ஒரு யுஎஸ்பி போர்ட் (USB Port), ஒரு ஹெட்போன் போர்ட் (Headphone Port) மற்றும் ஈதர்நெட் போர்ட் (Ethernet) உள்ளது.

ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), வைஃபை (Wifi), ப்ளூடூத் (Bluetooth) வசதி உள்ளது. இன்டர்நெட் அக்சஸ் ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு 2 வருட வாரண்டி உள்ளது. அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் ஆப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த டிவியின் விலை ரூ.28,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி 5 சதவிகிதம் ஆஃபர் பெறலாம். அதேபோல பிளிப்கார்ட் பே லேட்டர் மூலம் ரூ.1000 தள்ளுபடி பெறலாம். பழைய டிவியை எக்சேன்ஜ் கொடுத்து ரூ.16,900 வரை தள்ளுபடி பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days sale Best deals on TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X