Home
News

உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை இப்போது அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஆரம்ப அணுகலை அறிவித்த பின்னர் கிடைக்கிறது. நான்கு நாட்கள் அறிவிக்கப்பட்ட விற்பனை தினத்தில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள் உட்பட பிற எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையின் முதல் தினத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை தினத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ ஆகிய சாதனங்கள் சலுகைகள் குறித்து பார்க்கலாம். இந்த சாதனங்களுக்கு வழக்கத்தைவிட சிறந்த தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடி விலையில் ஐபோன் 11 சாதனத்தை ரூ.46,999 எனவும் ஐபோன் 11 ப்ரோ ரூ.79,999 எனவும் கிடைக்கிறது. அதேபோல் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக உடனடி ரூ.16,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயனர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் எஸ்இ தள்ளுபடி விலை

ஐபோன் எஸ்இ தள்ளுபடி விலை

ஐபோன் எஸ்இ பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் இந்த சாதனத்தை மிக குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் எஸ்இ முந்தைய விலை ரூ.39,900 ஆக இருந்தது. தற்போது இந்த ஐபோன் எஸ்இ சாதனத்தை ரூ.29,999 என்ற விலையில் வாங்கலாம். அதேபோல் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.16,500 வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் ஐபோன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

ஐபோன் எக்ஸ்ஆர் தள்ளுபடி விலை

ஐபோன் எக்ஸ்ஆர் தள்ளுபடி விலை

ஐபோன் எக்ஸ்ஆர் சானத்துக்கும் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தை பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் மிக குறைந்த விலையில் வாங்கலம். இந்த சாதனம் முன்னதாக ரூ.47,900 என இருந்தது. தற்போது இந்த ஐபோன் எக்ஸ் ஆர் விலை ரூ.38,999 ஆக இருக்கிறது. இந்த ஐபோன் மாடலினஅ டிஸ்ப்ளே அளவு 6.2 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப்செட், 12 எம்பி பிரதான கேமரா மற்றும் 7 எம்பி பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. அதேபோல் பரிமாற்ற சலுகையாக ரூ.16,500 ஆக இருக்கிறது.

குறைந்த விலையில் போக்கோ எக்ஸ்3

குறைந்த விலையில் போக்கோ எக்ஸ்3

போக்கோ எக்ஸ்3 சாதனத்துக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 ஆக இருந்தது. அதாவது சராசரியாக ரூ.20,000 ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரதான கேமரா இருக்கிறது.

ரூ.10,000-த்துக்கு கீழ் ரெட்மி 9 ப்ரைம்

ரூ.10,000-த்துக்கு கீழ் ரெட்மி 9 ப்ரைம்

ரூ.10,000-த்துக்கு கீழ் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த சாதனம் சிறந்த தேர்வாக இருக்கும். காரணம் ரெட்மி 9 பிரைம் இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரெட்மி 9 பிரைம் சாதனமானது முன்னதாக ரூ.11,999 என இருந்தது. தற்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் ரூ.9,499 என கிடைக்கிறது. ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி80 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது.

MSI GF63 லேப்டாப் மலிவு விலை

MSI GF63 லேப்டாப் மலிவு விலை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனையில் கிடைக்கும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் குறித்து பார்க்கையில், MSI GF63 15.6 இன்ச் கேமிங் லேப்டார் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த கேமிங் லேப்டாப் முந்தைய விலை ரூ.1,04,990 ஆக இருந்தது. தற்போது இந்த லேப்டாப் ரூ.64,990-க்கு கிடைக்கிறது. எஸ்பிஐ கார்ட பயனர்களுக்கு கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையாக கூடுதலாக ரூ.17,650 தள்ளுபடி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X