வெறும் ரூ.1 செலுத்தினால் போதும்: அட்டகாச சலுகையோடு பிளிப்கார்ட் பிக் சேவிங் தினம் அறிவிப்பு!

|

பிளிப்கார்ட் Big Saving Day நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினங்களில் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடியும் கவர்ச்சிகரமான சலுகையையும் நிறுவனம் வழங்கவுள்ளது. சலுகை தினத்தில் பொருட்கள் வாங்கவிரும்பும் வாடிக்கையாளர்கள் அதை ரூ.1 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆர்டர் செய்வதில் ஆர்வம்

ஆர்டர் செய்வதில் ஆர்வம்

கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று பர்ச்சேஸிங் செய்வதற்கு பதிலாக வீட்டில் இருந்தே ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

சாதனை அளவிலான வருவாய்

சாதனை அளவிலான வருவாய்

ஆன்லைன் நிறுவன வணிகம் சற்று வேகமாக வளர்ந்து வருகிறது, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சாதனை அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர்.

முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனம்

முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனம்

உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனமாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் ஆகும். சமீபத்திய அறிமுகமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ரிலையன்ஸ் டிஜிட்டலை அறிமுகம் செய்து நேரடி போட்டியில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகை தினங்களை அறிவித்து வருகிறது.

அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!

பிக் சேவிங்ஸ் தினம்

பிக் சேவிங்ஸ் தினம்

அதன்படி பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் சேவிங்ஸ் தினம் என்ற பெயரில் மெகா சலுகைகளை அறிவித்துள்ளது. பிக் சேவிங் தின விற்பனையில் ஏணைய பொருட்கள் அட்டகாச சலுகையோடு கிடைக்கும்.

செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை

செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை

இந்தாண்டுக்கான பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது, டேப்லெட்டுகள், டிவி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என பல பொருட்களுக்கு தள்ளுபடிகள் மட்டுமின்றி கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

ரூ.1 செலுத்தி முன்பதிவு

ரூ.1 செலுத்தி முன்பதிவு

அதோடு இந்த சலுகை தினத்தில் வாங்க விரும்பும் பொருட்களை தற்போதே முன்பதிவு செய்து கொள்ளும்படியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது ரூ.1 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மீதத் தொகையை செப்டம்பர் 18-க்குள் செலுத்தினால் போதும். இந்த முன்பதிவானது செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 16 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள் பெறும் தயாரிப்புகள்

சலுகைகள் பெறும் தயாரிப்புகள்

பிக் சேவிங் தின விற்பனையில் சலுகைகள் பெறும் தயாரிப்புகள் குறித்து பிளிப்கார்ட் தெரிவிக்கவில்லை. இதில் ஸ்மார்ட்போன்கள் மற்று்ம டேப்லெட்கள் வாங்கவிரும்பும் வாடிக்கையாளர்கள், கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி

கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி

எஸ்பிஐ கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறுவார்கள். பிக் சேவிங் தின விற்பனையில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் பக்கத்திற்கு சென்று ப்ரீ புக் ரூ.1 கட்டணம் செலுத்தி பொருட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Day Start From September 18 to 20 With Attractive Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X