நமக்கு அமோக லாபம்தான்- ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை 2021

|

பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையும், சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையையும் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் அறிவித்த பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை குறித்து பார்க்கலாம். பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு தற்போது முதலே பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின 2021 விற்பனை நடைமுறையில் இருக்கிறது. பிற அனைத்து பயனர்களுக்கும் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின 2021-ல் சாதனங்களை சலுகை விலையில் வாங்கலாம்.

முன்னணி மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவிகள்

முன்னணி மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவிகள்

ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டுள்ள பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின 2021 விற்பனையில் முன்னணி மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவிகள் உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏதேனும் கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

ஐபோன் 12 மினி 64 ஜிபி வேரியண்ட்

ஐபோன் 12 மினி 64 ஜிபி வேரியண்ட்

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை 2021- மொபைல் சலுகைகள் குறித்து பார்க்கையில், ஆப்பிள் ஐபோன் 12 மினி 64 ஜிபி வேரியண்ட் ஐபோனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐபோன் ரூ.69,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஐபோன் ரூ.59,999 ஆக இருக்கிறது. அதுமட்டுமின்றி ஆப்பிள் ஐபோன் 12 மினிக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் உள்ளன. ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது 10% சலுகையும் கிடைக்கிறது.

ஐபோன் 12 சாதனத்துக்கு தள்ளுபடி

ஐபோன் 12 சாதனத்துக்கு தள்ளுபடி

ஐபோன் 12 சாதனத்துக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.67,999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்ட் மூலம் பரிமாற்றம் செய்யும் போது 10 சதவீத தள்ளபடி வழங்கப்படுகிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 சாதனத்தின் விலை ரூ.55,999 ஆக இருந்த நிலையில் தற்போது ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 விலை ரூ.39,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் ஒரு பழைய போன் என்றாலும் நீங்கள் தொகுக்கப்பட்ட பரிமாற்ற சலுகையை பெறலாம். இந்த சாதனத்துக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 64 மெகாபிக்சல் கேமரா உட்பட மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகனஅ 865+ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது.

மோட்டோரோலா ஜி 10 பவர்

மோட்டோரோலா ஜி 10 பவர்

மோட்டோரோலா ஜி 10 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆக இருந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை 2021-ல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 ஆக இருக்கிறது. கூடுதல் சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,450 ஆக இருக்கிறது. ஐசிஐசி வங்கி கார்ட்கள் மூலம் சாதனம் வாங்கும் போது கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மோட்டோரோலா ஜி10 சாதனம் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா மூலம் இயக்கப்படுகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி 8 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்

ரியல்மி 8 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்

ரியல்மி 8 சாதனமானது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் உடன் வருகிறது. ரியல்மி 8 சாதனத்தின் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை 2021-ல் இந்த சாதனத்தை ரூ.13,999 ஆக இருக்கிறது. கூடுதல் சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.13,450 எனவும் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Day 2021 Comes With Great Offers For Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X