சரியான நேரம்., ரியல்மி ஸ்மார்ட்போனை தட்டித் தூக்கலாம்: பிளிப்கார்ட் சலுகைகள்!

|

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை இப்போது அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஆரம்ப அணுகலை அறிவித்த பின்னர் கிடைக்கிறது. நான்கு நாட்கள் அறிவிக்கப்பட்ட விற்பனை தினத்தில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள் உட்பட பிற எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையின் முதல் தினத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை தினத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையானது ஜூன் 13 முதல் தொடங்கி ஜூன் 16 வரை நடைபெறுகிறது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு இந்த சலுகை ஜூன் 12 முதல் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

ரியல்மி சாதனங்கள் தள்ளுபடி

ரியல்மி சாதனங்கள் தள்ளுபடி

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில், ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் சாதனத்தில் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ரூ.4000 தள்ளுபடி மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் என கூறப்படுகிறது.

 ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி

ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி

அதுமட்டுமின்றி பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில், ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி, ரியல்மி நார்சோ 30ஏ, ரியல்மி நார்சோ 20, ரியல்மி 8, ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி, ரியல்மி 8 ப்ரோ, ரியல்மி 8 5ஜி, ரியல்மி சி12, ரியல்மி சி15, ரியல்மி சி20, ரியல்மி சி21, ரியல்மி சி25 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் ரியல்மி நார்சோ 20முதல் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி வரையிலான பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு ரியல்மி தள்ளுபடிகளை வழங்குகிறது. பிளிப்கார்ட்டில் ரியல்மி எக்ஸ்3 சூப்பர் ஜூம் சாதனம் ரூ.6000 என்ற தள்ளுபடியில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்-ல் கிடைக்கின்றன.

ரியல்மி 7 சீரிஸ் தள்ளுபடிகள்

ரியல்மி 7 சீரிஸ் தள்ளுபடிகள்

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 தள்ளுபடி, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ரூ.3000 தள்ளுபடி, ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போனுக்கு ரூ.200 தள்ளுபடி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்-ல் வழங்கப்படுகிறது. ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி உட்பட வங்கி சலுகைகள்

தள்ளுபடி உட்பட வங்கி சலுகைகள்

ரியல்மி நார்சோ 30ஏ மற்றும் ரியல்மி 8 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரியல்மி சி12 மற்றும் ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 பிளிப்கார்ட்டில் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி ரியல்மி.காம்-ல் கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி, ரியல்மி 8 5ஜி மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த வங்கி சலுகை பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Day 2021 Announced with Huge Discount on Realme Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X