Flipkart இன் அடுத்த சிறப்பு விற்பனை தேதி இதோ.! தாராளமான தள்ளுபடியை மிஸ் பண்ணிடாதீங்க.!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஒரு வழியாக நடந்து முடிந்தது. அதில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், வியரபில் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் பொருட்கள் போன்ற பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களின் மீது தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை Flipkart வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அதனை தொடர்ந்து நிறுவனம் தனது வார கால விற்பனையை நடத்தியது. இதற்கு அடுத்தபடியாக பண்டிகைக் காலத்திற்கான மற்றொரு சிறப்பு விற்பனை குறித்து நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது.

Flipkart Big Dussehra Sale எப்போது ஆரம்பம்?
இது பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனை (Flipkart Big Dussehra Sale) என்று அழைக்கப்படும். வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்ற அறிவிப்பை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனைக்கான தேதியையும் Flipkart இப்போது அறிவித்துள்ளது. இது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த தயாரிப்புகள் மீது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்?
இந்த விற்பனையின் போது, நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல தயாரிப்புகளுக்குத் தள்ளுபடியை வழங்கும். Flipkart மேலும் சில கூடுதல் சலுகைகளை வெளியிட்டுள்ளது, தசரா விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் HDFC கார்டு மூலம் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்பதையும் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனை தேதி, சலுகைகள் மற்றும் மற்ற விவரங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனை யாருக்கெல்லாம் 4ம் தேதி முதல் கிடைக்கும்?
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிக் தசரா விற்பனையை Flipkart நடத்துகிறது. வரவிருக்கும் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறும். Flipkart Plus வாடிக்கையாளர்கள் தங்கள் உறுப்பினர் சந்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு ஒரு நாள் முன்னதாக பல்வேறு சலுகைகளை இவர்கள் அணுகலாம். பிளஸ் உறுப்பினர்களுக்கு, பிக் தசரா விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

80 சதவீதம் வரை தள்ளுபடியா?
இந்த சிறப்பு விற்பனையின் போது கிடைக்கும் சலுகைகளின் முழு விபரங்களை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. Flipkart வரவிருக்கும் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் என்ன சலுகைகளை வழங்கும் என்பது குறித்த தகவல் வெளியிடவில்லை. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. தசரா விற்பனையின் போது ஸ்மார்ட் டிவி மற்றும் உபகரணங்கள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும்.

இப்போது வாங்கிக்கொண்டு பிறகு பணம் செலுத்தலாமா?
எச்டிஎஃப்சி வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் தசரா விற்பனையின் போது, கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தவிர, வாடிக்கையாளர்கள் இப்போது buy now and pay later என்ற Flipkart Pay Later அம்சத்தை பயன்படுத்தலாம். பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சுமார் ரூ. 50,000க்குக் குறைவான விலையில் iPhone 13 கிடைக்க வாய்ப்புள்ளது. சரி, எது எப்படியாக இருந்தாலும், Flipkart இன்னும் சில தினங்களில் இந்த சிறப்பு விற்பனையைத் துவங்கவுள்ளது என்பதனால், இந்த தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications