Home
News

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 இன் நம்பமுடியாத சலுகை விபரங்கள்!

பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் 2019 விற்பனையை முடித்துவிட்டடு, தற்பொழுது அதன் அடுத்த பெரிய விற்பனைக்குத் தயாராகிவிட்டது. வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனம், தனது 'பிக் தீபாவளி சேல்ஸ் 2019' பற்றிய அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019

பிக் தீபாவளி சேல்ஸ் 2019 வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கி, தொடர்ந்து ஐந்து நாட்களாக அக்டோபர் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. பிக் பில்லியன் டேஸ் விற்பனையைத் தவறவிட்ட பயனர்கள் இந்த 'பிக் தீபாவளி சேல்ஸ்' விற்பனையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

சிறப்புத் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை

சிறப்புத் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை

இந்த பிக் தீபாவளி சேல்ஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், அணியக் கூடிய ஸ்மார்ட்வாட்ச்கள், டிவிகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் போன்ற பல பொருட்களுக்கு, சிறப்புத் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகையில் கிடைக்குமென்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விளம்பரங்களையும் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள்

பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள்

பிக் பில்லியன் நாட்கள் விற்பனையைப் போலவே, பிளிப்கார்ட்டின் அடுத்த பிக் தீபாவளி சேல்ஸ் விற்பனையும், அதன் பிளஸ் உறுப்பினர்களுக்கு மட்டும் ஒரு நாள் முன்னரே அணுகலை வழங்குகிறது. இதன்படி பிக் தீபாவளி சேல்ஸ் விற்பனை, அக்டோபர் 11 ஆம் தேதி இரவு 8 மணி முதல் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் அணுக முடியும் மற்றும் மற்ற பயனர்கள் அக்டோபர் 12 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சலுகைகளைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10% சதவீத உடனடி தள்ளுபடி

10% சதவீத உடனடி தள்ளுபடி

SBI வங்கியின் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு, 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க பிளிப்கார்ட் நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்துள்ளது. இது தவிர, பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனை 2019 இல் கட்டணமில்லாத ஈஎம்ஐ விருப்பங்கள், எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் போன்களில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

டிவிகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி

டிவிகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 7 எஸ், ரியல்மி 5, விவோ இசட் 1 ப்ரோ மற்றும் ரியல்மி சி 2 போன்ற போன்களுக்கு பிரத்தியேக சலுகைகளை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதுதவிர டிவிகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் பிரிவின் கீழ் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 75 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தமகா டீல்ஸ் ஃபிளாஷ் விற்பனை

தமகா டீல்ஸ் ஃபிளாஷ் விற்பனை

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 விற்பனை நாட்களில், காலை 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு மொபைல் போன்கள், டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் கூடுதல் தள்ளுபடியை வழங்கும் சிறப்பு 'தமகா டீல்ஸ்' என்ற ஃபிளாஷ் விற்பனையும் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ் ஹவர்ஸ் ஃபிளாஷ் விற்பனை

ரஷ் ஹவர்ஸ் ஃபிளாஷ் விற்பனை

அதேபோல் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 விற்பனை நாட்களில், 'ரஷ் ஹவர்ஸ்' ஃபிளாஷ் விற்பனையின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்களுக்கு அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sales 2019 Incredible Offer Details On Smartphones And Electronics Appliances : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X