பிக் தீபாவளி சேல்.! ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவிகளுக்கு அதிரடி சலுகைகள்.!

|

பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த சிறப்பு விற்பனைiயான பிக் தீபாவளி சேல் வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிளிப்கார்ட் நடத்திய பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி உட்பட பல பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பிக் பில்லியன் டேஸ் விற்பனை கடந்த அக்டோபர் 21-ம் தேதி முடிவடைந்தது.

பிக் தீபாவளி சேல்.! ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவிகளுக்கு அதிரடி சலுகைகள

தற்சமயம் பிளிப்கார்ட் தசரா சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இது அக்டோபர் 28-ம் தேதி முடிவடைகிறது. இப்போது இந்த இந்த ஈ-காமர்ஸ் தளம் மற்றொரு "பட தமகா" விற்பனைக்கு தயாராகி வருகிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனையைப் போலவே, பிக் தீபாவளி சேல் ஆனதும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கான ஆரம்ப அணுகலுடன் தொடங்கும்.

குறிப்பாக இந்த விற்பனையிலும் பல வங்கி சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் பலவகையான தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் ஆகியவைகள் அணுக கிடைக்கும். பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் விற்பனையானது, பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு அக்டோபர் 29 நள்ளிரவு முதல் தொடங்கும், மேலும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதே நாளின் பிற்பகுதியில் தொடங்கும்.

பிக் தீபாவளி சேல்.! ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவிகளுக்கு அதிரடி சலுகைகள

இந்த சிறப்பு விற்பனை ஏழு நாட்கள் நீடிக்கும் மற்றும் நவம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையும். மேலும் இந்த விற்பனையின் போது பயனர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

அதேபோல் வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபின்சர்வ், எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்பிஐ மற்றும் பல முன்னணி வங்கிகளிலும், டெபிட் கார்டுகளிலும் நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களைப் பெறலாம்.

பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேல் ஆனது சாம்சங் கேலக்ஸி எஃப் 41, கேலக்ஸி எஸ் 20 பிளஸ், கேலக்ஸி ஏ 50 எஸ் உள்ளிட்ட பல்வேறு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்படும். பின்பு போக்கோ எம் 2, போக்போ எம் 2 ப்ரோ, போக்போ சி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்படும்.

பிக் தீபாவளி சேல்.! ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவிகளுக்கு அதிரடி சலுகைகள

அதேபோல் ஒப்போ ரெனோ 2 எஃப், ஒப்போ ஏ 52, ஒப்போ எஃப் 15 மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒப்போ ஸ்மார்ட்போன்களும் மீதும், ரியல்மி நார்சோ 20 சீரிஸ் மீதும் சில சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ஸ்பெஷல் பிளிப்கார்ட் விற்பனையின் போது கேமராக்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்போன்கள் மற்றும் பலவற்றையும் உள்ளடக்கிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்ஸசெரீஸ்களின் மீதும் பயனர்கள் 80 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம்.

பிக் தீபாவளி சேல்.! ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவிகளுக்கு அதிரடி சலுகைகள

இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்படும். பின்பு டேப்லெட் மாடல்களுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale Starts October 29 and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X