அடேங்கப்பா.! இந்த Samsung 5G போன் மீது ரூ.19,000 தள்ளுபடியா? வாங்க வொர்த்-ஆ.! இல்லையா?

|

இந்த வருட தீபாவளி வேற லெவெலில் அமையப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம், Flipkart மற்றும் Amazon போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மக்களுக்கான சிறப்பு விற்பனையைத் துவங்கி வைத்துள்ளன.

இதற்கு முன் இல்லாத வகையில், ஏராளமான தள்ளுபடியை இம்முறை இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன. குறிப்பாக Flipkart அறிமுகம் செய்துள்ள பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Diwali Sale) ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S21 FE 5G மீது ரூ. 19,000 தள்ளுபடியா?

Samsung Galaxy S21 FE 5G மீது ரூ. 19,000 தள்ளுபடியா?

Flipkart Plus உறுப்பினர்களுக்காக பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. மற்றவர்களுக்கு இது நாளை முதல் துவங்கும்.

பிளிப்கார்ட் பிளஸ் சந்தா உங்களிடம் இருக்கிறது என்றால், உங்களுக்கு உண்மையிலேயே லக் அடித்துள்ளது. Samsung Galaxy S21 FE 5G போன் மீது நம்ப முடியாத வகையில் ரூ.19,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனை மிகக் குறைந்த விலையில் வாங்க இது ஒரு அரிய வாய்ப்பு.

பிரீமியம் 5G போன் மீது நம்ப முடியாத சலுகை.!

பிரீமியம் 5G போன் மீது நம்ப முடியாத சலுகை.!

சாம்சங்கின் இந்த பிரீமியம் 5G போன் (Premium 5G Phone) இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.54,999 ஆக இருக்கிறது.

இப்போது, ​​Flipkart இன் பிக் தீபாவளி விற்பனையின் மூலம், இதை நாம் வெறும் ரூ. 35,999 என்ற விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஒரு நம்ப முடியாத சிறந்த மிகப்பெரிய ஒப்பந்தமாகும். இந்த ஸ்மார்ட்போன் மீது தற்காலிகமாக ரூ.19,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

ரூ.19,000-திற்கு மேல் சலுகை வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.!

ரூ.19,000-திற்கு மேல் சலுகை வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.!

இந்த விலை குறைப்பு, Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது என்பது கவனிக்கத்தக்கது.

இத்துடன் சேர்த்து, கூடுதல் சலுகையையும் பெற இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீங்கள் SBI மற்றும் Kotak வங்கி கிரெடிட் கார்டு பயனர் என்றால், இந்த ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கும் தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.1,250 தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம்.

Samsung Galaxy S21 FE வாங்குவது சிறந்ததா? இல்லையா?

Samsung Galaxy S21 FE வாங்குவது சிறந்ததா? இல்லையா?

இதன் மூலம் Samsung Galaxy S21 FE 5G போனின் விலையை ரூ.34,749 ஆக குறைக்க முடியும். ஆனால், இந்தியாவில் Samsung Galaxy S21 FE போனை இப்போது வாங்குவது சிறந்ததா? இல்லையா? என்ற குழப்பம் உங்களுக்கு நிச்சயமாக எழக்கூடும்.

குழப்பம் வேண்டாம், உங்கள் சந்தேகத்தை இப்போதே தெளிவாகத் தீர்த்து வைக்கிறோம். ரூ. 35,999 விலையில், நீங்கள் ஒரு அற்புதமான ஒப்பந்தத்தைப் பெறுகிறீர்கள்.

5G சேவைக்கு அப்டேட் செய்வதாக கூறி மோசடி.! வங்கி கணக்கு பணம் அபேஸ்.! உஷார் மக்களே.!5G சேவைக்கு அப்டேட் செய்வதாக கூறி மோசடி.! வங்கி கணக்கு பணம் அபேஸ்.! உஷார் மக்களே.!

Samsung Galaxy S21 FE பெஸ்ட்னு சொல்ல பல காரணம் இருக்கே.!

Samsung Galaxy S21 FE பெஸ்ட்னு சொல்ல பல காரணம் இருக்கே.!

எனவே, நீங்கள் பல காரணங்களுக்காக Samsung Galaxy S21 FE போனை வாங்கலாம். இது அட்டகாசமான சாப்ட்வேர் மற்றும் துடிப்பான AMOLED 120Hz டிஸ்பிளே உடன் இது வருகிறது.

இது சிறப்பான பயனர் அனுபவத்தை லேக் இல்லாமல் வழங்குகிறது. இது நல்ல பேட்டரி ஆயுளையும் வழங்குகிறது. கேமரா செயல்திறன் கூட இதில் சிறப்பாக அமைந்துள்ளது.

ரூ.30,000 விலை வரம்பில் உள்ள சில போன்களை விட இது சிறந்த கேமராவைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy S21 FE 5G போனில் இருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் இது தான்.!

Samsung Galaxy S21 FE 5G போனில் இருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் இது தான்.!

இந்த Samsung Galaxy S21 FE 5G சாதனம் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்குகிறது.

இது குறைந்த விலை பிரிவில் நீங்கள் பெறாத ஒரு அம்சமாக இருக்கிறது. இருப்பினும், இந்த போனை வாங்குவதற்கான உங்கள் முடிவை மாற்றக்கூடிய சில விஷயங்களும் இதில் இருக்கிறது.அதையும் வெளிப்படையாகத் தெரிவித்துவிடுகிறோம்.

Samsung Galaxy S21 FE போன் சார்ஜருடன் வரவில்லை என்பதே ஒரு பெரிய நெகட்டிவ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

ரூ.30,000 வரம்பில் இது நல்ல டீல் தானா?

ரூ.30,000 வரம்பில் இது நல்ல டீல் தானா?

எனவே, வாடிக்கையாளர்கள் தனியாக ஒரு அடாப்டரை வாங்க சில பணத்தை செலவிட வேண்டியிருக்கும். மேலும், ரூ.30,000 வரம்பில் உள்ள போன்கள் 80W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன.

ஆனால், சாம்சங்கின் இந்த 5G போன் 25W ஆதரவுடன் மட்டுமே வருகிறது. கூடுதலாக, இதில் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் விருப்பத்தை ஆதரிக்கக்கூடிய அம்சம் இல்லை.

இதைத் தவிர இந்த போன் மீது இப்போது கிடைக்கும் இந்த சலுகை உண்மையிலேயே சிறப்பானது தான்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali sale: Samsung Galaxy S21 FE 5G Gets Flat Rs 19000 Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X