இனி ஆஃபர் வேற லெவல்ல இருக்கும்.. Flipkart பிக் தீபாவளி சேல்..தேதிய குறிச்சு வச்சுக்கோங்க..
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை(Flipkart Big Billion Days Sale) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனை தொடங்க இருக்கிறது பிளிப்கார்ட் நிறுவனம். தற்போது இந்த புதிய சிறப்பு விற்பனை தேதி வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
அதாவது வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள், இயர்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

அதேபோல் பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி உள்ளது. பின்பு எஸ்பிஐ வங்கி கார்டை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் 14 மாடல் ஆனது குறைந்த விலையில் வாங்க முடியும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இதுதவிர ஐபோன் 13, ஐபோன் 12 போன்ற மாடல்களையும் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கும். குறிப்பாக எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சோனி, நிகான் மற்றும் கேனான் போன்ற முன்னணி நிறுவனங்களின் கேமராக்கள் கூட தள்ளுபடி விலையில் கிடைக்கும். அதேபோல் ஏசி, குளிர்சாதனப் பெட்டிகள், மைக்ரோவேவ் போன்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் இந்தபிளிப்கார்ட் தள்ளுபடியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) போனுக்கு தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனின் அம்சங்களைப் பார்ப்போம். மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வருகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 32 எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 6, (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன. குறிப்பாக பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications