நம்பலனாலும் இதான் நிஜம்.. ரூ.15,840க்கு iPhone விற்கும் பிளிப்கார்ட்! தீபாவளி பம்பர் ஆஃபர்

|

எப்படியாவது ஒரு புதிய ஐபோன் மாடலை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இந்த சமூகத்தில் ஐபோனை பாக்கெட்டில் வைத்து நடமாடினால் அதன் கெத்தே தனி. நல்ல வேலையில் சேர்ந்து நிறைய சம்பளம் வாங்கிய பிறகு ஒரு ஐபோனை கண்டிப்பாக வாங்குவோம் என்று சிந்திப்பவர்கள் ஏராளம். இதற்கு காரணம் ஐபோனின் விலை மிக அதிகம் என்பது தான். ஆனால் இந்த கவலை இப்போது வேண்டாம்.

அனைவருக்கும் ஐபோன்

அனைவருக்கும் ஐபோன்

முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ஏணைய ஆண்ட்ராய்டு போன்கள் ஐபோன் விலைக்கு இணையாக அறிமுகமாகி வருகிறது. எனவே ஐபோன்கள் விலை என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகம் என்று குறிப்பிட்டுவிட முடியாது.

இருப்பினும் ஆன்லைன் விற்பனை தளங்கள் அவ்வப்போது சலுகைகளை வழங்கி ஐபோனை அனைவருக்குமானதாக மாற்றி வருகிறது. அதன்படியான ஒரு சலுகையை தான் பார்க்கப்போகிறோம்.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை தொடங்கி இருக்கிறது. இந்த விற்பனையானது பிளஸ் உறுப்பினர்களுக்கு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.அனைவருக்குமான விற்பனையாக இது நாளை முதல் தொடங்கப்படும்.

எந்த ஒரு சலுகை தின விற்பனையும் அனைவருக்கும் தொடங்கும் ஒரு தினத்துக்கு முன்னாள் அதன் ப்ரீமியம் உறுப்பினர்களுக்கு கிடைப்பது வழக்கம்.

பிளிப்கார்ட் அதன் பிளஸ் உறுப்பினர்களுக்கும், அமேசான் அதன் பிரைம் உறுப்பினர்களுக்கும் இந்த பிரத்யேக சலுகையை வழங்கி வருகிறது.

மாற்றம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று

மாற்றம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் பல்வேறு கேட்ஜெட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஐபோன்கள் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஆனால் இதில் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் இருக்கிறது.

பிளிப்கார்ட்டில் முக்கிய சாதனங்களுக்கு வழங்கப்படும் சலுகை விலையில் அடிக்கடி மாற்றம் இருக்கும். முதலில் எடுத்துக்காட்டாக ஒரு விஷயத்தை பார்க்கலாம்.

உடனே மாற்றம் செய்ய வாய்ப்பு அதிகம்

உடனே மாற்றம் செய்ய வாய்ப்பு அதிகம்

Apple India இணையதளத்தில் ஐபோன் 13 இன் 128GB வேரியண்ட் விலை ரூ.69,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் Flipkart Big Billion Days நிகழ்வில் ஐபோன் 13 ரூ.49,990 என்ற விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்த நாளே இந்த விலையில் மாற்றம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்டது. பலரும் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். எனவே நீங்கள் இந்த தகவலின் மூலம் ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் முழுமையாக படித்துவிட்டு உடனே பிளிப்கார்ட் தளத்தை அணுகவும்.

அதீத தள்ளுபடியில் ஆப்பிள் ஐபோன்கள்

அதீத தள்ளுபடியில் ஆப்பிள் ஐபோன்கள்

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது பிளஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கிறது. நாளைமுதல் அனைவருக்கும் கிடைக்கும்.

பிளிப்கார்ட்டில் பல எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஐபோன் 13, 12 மற்றும் 11 போன்ற மாடல்கள் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

iPhone 13 தள்ளுபடி

iPhone 13 தள்ளுபடி

iPhone 13 இன் 128GB மாடல் ரூ.10,000 தள்ளுபடியை பெறுகிறது. அதன்படி தற்போது ரூ.59,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. SBI வங்கி சலுகைகள் உடன் வாடிக்கையாளர்கள் இந்த ஐபோனை ரூ.57,990 என வாங்கலாம். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் ரூ.3000 முதல் ரூ.5000 வரை தள்ளுபடியை பெறலாம். நீங்கள் மாற்றம் செய்யும் பழைய ஐபோனை பொறுத்து இந்த ஐபோன் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

ஐபோன் 14 மாடலையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

ஐபோன் 14 மாடலையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

அதேபோல் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஐபோன் 12 மினி மாடலை ரூ.36,990 எனவும் ஐபோன் 11 மாடலை ரூ.31,990 எனவும் வாங்கலாம். இதில் வங்கி சலுகைகளும் அடங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 14 மாடலையும் சிறந்த தள்ளுபடியுடன் வாங்கலாம்.

ரூ.15,840 விலையில் ஐபோன்

ரூ.15,840 விலையில் ஐபோன்

ரூ.15,000க்கு ஐபோன் என்று குறிப்பிட்டீர்களே அது என்ன என்று அறிய ஆர்வமாக இருக்கிறது அல்லவா அதுகுறித்து பார்க்கலாம். இந்த விலையில் வாங்கக் கிடைக்கும் மாடல் ஐபோன் 11 ஆகும். ஐபோன் 11 ஆனது மிக முந்தைய மாடல் ஆகும். சமீபத்தில் ஐபோன் 14 மாடலே அறிமுகமாகி விட்டது. இந்த ஐபோன் 11 ஆனது 2019 ஆம் ஆண்டு அறிமுகமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிளிப்கார்ட்டில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் உட்படுத்தி ஐபோன் 11 மாடலை ரூ.17,840 என வாங்கலாம். அதேபோல் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 ரெட் கலர் வேரியண்ட்டை ரூ.15,840 என வாங்கலாம்.

இந்த விலையில் எப்படி ஐபோன் வாங்குவது?

இந்த விலையில் எப்படி ஐபோன் வாங்குவது?

ஐபோன் 11 மாடலின் நிர்ணய விலை ரூ.41,990 ஆகும். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஐபோன் 11 மாடல் ரூ.35,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஐபோன் 11 இன் ரெட் கலர் வேரியண்ட் ரூ.33,990 என பிளிப்கார்ட் சலுகை தின விற்பனையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.16,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் அதாவது ரூ.1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயனர்கள் ஐபோன் 11 மாடலை ரூ.17840 எனவும் ஐபோன் 11 சிவப்பு நிற மாறுபாட்டை ரூ.15,840 எனவும் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali sale: Apple iPhone Now Available at rs.15840.. Diwali bumper offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X