Home
News

Flipkart Big Diwali Sale தேதிகள் அறிவிப்பு! iPhone 14 முதல் Motorola Edge 40 வரை பல போன்கள் மீது பலே தள்ளுபடி!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) என்கிற பெயரின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் நடந்த தசரா மற்றும் நவராத்திரி பண்டிகை கால சிறப்பு விற்பனையை தொடர்ந்து, பிளிப்கார்ட் வலைத்தளமானது, 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான புதிய சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் 2023 (Flipkart Big Diwali Sale 2023) என்கிற பெயரின்கீழ் நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனை எப்போது தொடங்கும்? மொத்தம் எத்தனை நாட்கள் நடக்கும்? இந்த விற்பனை எந்த தேதியில் முடிவடையும்? என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

Flipkart Big Diwali Sale தேதிகள் அறிவிப்பு.. பல போன்கள் மீது தள்ளுபடி!

எப்போது தொடங்கும்.. எப்போது முடியும்? பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் 2023 ஆனது நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த சிறப்பு விற்பனையும் கூட, பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) ஒரு நாளுக்கு முன்னதாகவே தொடங்கும்; அதாவது நவம்பர் 1 ஆம் தேதி முதலே தொடங்கும். இந்த புதிய தீபாவளி விற்பனை நவம்பர் 11 வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்? பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) மாடலானது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.61,999 ஆகும். பிளிப்கார்ட் வலைதளத்தின் படி, எந்த விதிமுறைகளும் இல்லாமல் இதன் விலை ரூ.54,999 ஆக குறைக்கப்படும்.

Flipkart Big Diwali Sale தேதிகள் அறிவிப்பு.. பல போன்கள் மீது தள்ளுபடி!

கூடவே ஐபோன் 14 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை (Exchange Offer) க்ளைம் செய்யும் பட்சத்தில் கூடுதலாக ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் (Bank Discount) சலுகையும் கிடைக்கும். கடைசியாக ஐபோன் 14 மீது ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியும் இருக்கும் என்றும் பிளிப்கார்ட் வலைத்தளம் கூறுகிறது. இப்படியாக ஐபோன் 14 மாடலின் விலையை ரூ.49,999 ஆக குறைக்க முடியும்.

ஒருவேளை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை க்ளைம் செய்யாவிட்டாலும் கூட, ஓராண்டுக்கு முன்பாக அறிமுகமான ஐபோன் 14 மாடலானது அசல் விலையை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும். ஐபோன் 14 மீது கிடைக்கும் சலுகைகளை போலவே ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (Apple iPhone 14 Plus) மீதும் சலுகைகள் கிடைக்கும். இதை உங்களால் வெறும் ரூ.59,999 க்கு வாங்க முடியும்.

ஐபோன் 14 சீரீஸ் மாடல்களை போலவே, சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி (Samsung Galaxy F14 5G) மாடலின் மீதும் பெரிய தள்ளுபடி கிடைக்கும் என்று பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,990 க்கு வாங்க கிடைக்கும். மேலும் ரியல்மி சி51 (Realme C51) ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மலிவு விலைக்கு, அதாவது ரூ.7,999 விற்பனைக்கு வரும்.

Flipkart Big Diwali Sale தேதிகள் அறிவிப்பு.. பல போன்கள் மீது தள்ளுபடி!

இதேபோல மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) மற்றும் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் ஆகிய மாடல்கள் முறையே ரூ.25,999 மற்றும் ரூ.33,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். விவோ டி2 ப்ரோ (Vivo T2 Pro) ஸ்மார்ட்போன் ஆனது வங்கி சலுகையோடு சேர்த்து ரூ.21,999 க்கு விற்பனை செய்யப்படும்.

போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro) ஸ்மார்ட்போனும் கூட மிகவும் குறைந்த விலையில் விற்கப்படும். பிளிப்கார்ட் பக்கத்தின்படி, இதன் விலை ரூ.18,499 வரை குறையலாம். மேலும் சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கும், கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) ஸ்மார்ட்போன் ரூ.31,499 க்கும் வாங்க கிடைக்கும் என்று பிளிப்கார்ட்டின் விற்பனை பட்டியல் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale Announced Starts on November 2 Ends on November 11 Discounts on Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X