Home
News

Flipkart Big Diwali Sale நாளை முதல் ஆரம்பமா? இறுதி சிறப்பு விற்பனை இது தானா? முழு விபரம்.!

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனைக்கான (Flipkart Big Diwali Sale) தேதியை இப்போது Flipkart அறிவித்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வரவிருக்கும் இந்தியாவின் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் நோக்கத்தில் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது.

பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் பிக் தசரா விற்பனையைத் தொடர்ந்து, வால்மார்ட்டுக்குச் சொந்தமான இந்திய இ-காமர்ஸ் நிறுவனம் இப்போது, Flipkart Big Diwali Sale விற்பனையை அக்டோபர் 19 முதல் நடத்தவுள்ளது.

Flipkart பிக் தீபாவளி விற்பனை எப்போது துவங்குகிறது?

Flipkart பிக் தீபாவளி விற்பனை எப்போது துவங்குகிறது?

Flipkart இன் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் 23 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு நடக்கும் இறுதி ஸ்பெஷல் சேல்ஸ் விற்பனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்தபடி, Flipkart Plus உறுப்பினர்களுக்கு 24 மணிநேரத்திற்கு முன்பே இந்த விற்பனை துவங்கிவிடுகிறது. இதனால், நாளை முதல் Flipkart Plus உறுப்பினர்கள் இந்த சிறப்பு விற்பனையில் ஷாப்பிங் செய்யத் துவங்கலாம்.

சலுகை மற்றும் தள்ளுபடி விபரம்.!

சலுகை மற்றும் தள்ளுபடி விபரம்.!

தீபாவளி விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய சில சலுகைகள் மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது பார்ப்போம்.

இந்த விற்பனையின் போது, ​​பிளிப்கார்ட் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்கள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும்.

SBI கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்கள் தீபாவளி விற்பனையின் போது, கிடைக்கும் சலுகையுடன் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியைக் கோரலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா.! இந்த பழைய போன்களை கூட எக்ஸ்சேஞ் செய்யலாமா?

அடேங்கப்பா.! இந்த பழைய போன்களை கூட எக்ஸ்சேஞ் செய்யலாமா?

SBI கார்டு சலுகை EMI பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. இது தவிர, Paytm வாலட் மற்றும் UPI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி கேஷ்பேக் நன்மையையும் பிளிப்கார்ட் வழங்குகிறது.

ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கும். இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சாதனங்களை மாற்றிக்கொள்ளலாம்.

ஃபீச்சர் போன்களுக்கும் எக்ஸ்சேஞ் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

இப்போ வாங்கிட்டு பிறகு காசு கொடுத்தா போதுமா? - Flipkart Pay Later.!

இப்போ வாங்கிட்டு பிறகு காசு கொடுத்தா போதுமா? - Flipkart Pay Later.!

நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் ரூ.1,750 என்ற விலை முதல் தொடங்குகிறது.

இந்த விற்பனையின் போது, புதிய சாதனங்களை வாங்கிய பின்னர் தொகையைச் செலுத்துவதற்கும் பிளிப்கார்ட் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு Flipkart Pay Later என்ற சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன், Flipkart முழுமையான மொபைல் பாதுகாப்புத் திட்டங்களை ரூ.199 விலை முதல் வழங்குகிறது. ஸ்கிரீன் கேர் திட்டங்கள் ரூ.99 முதல் தொடங்கும்.

 Flipkart Big Diwali Sale விற்பனையில் எந்த பொருட்கள் மீது எவ்வளவு சலுகை?

Flipkart Big Diwali Sale விற்பனையில் எந்த பொருட்கள் மீது எவ்வளவு சலுகை?

இந்த Flipkart Big Diwali Sale விற்பனையில், பல்வேறு பட்ஜெட், இடைப்பட்ட மற்றும் பிரீமியம் போன்களின் மீது தாராளமான சலுகைகள் கிடைக்கும். Realme C33 , POCO C31, OPPO K10 5G, Redmi 10 போன்ற சில ஸ்மார்ட்போன்கள் மீது அபாரமான சலுகைகள் கிடைக்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடியும், கேமிங் லேப்டாப் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும். ஸ்மார்ட் டிவிகள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale 2022 Starts From October 19 With Massive Offers and Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X