ஆபரில் கெத்து காட்டும் Flipkart.. பாதி விலையில் ஸ்மார்ட்டிவிகள், அதீத தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்!

|

Flipkart Big Diwali sale 2022 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிகள், பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வீட்டு சமையலறை பொருட்கள் என பலவகை பொருட்களுக்கு அதீத தள்ளுபடிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 19(நேற்று) முதல் அதன் பிளஸ் உறுப்பினர்களுக்கு தொடங்கப்பட்டது. இன்றுமுதல் அனைவருக்குமான விற்பனையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

சிறந்த தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்டிவிகள்

சிறந்த தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்டிவிகள்

எஸ்பிஐ கிரெடிட் கார்ட்கள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் இந்த காலக்கட்டத்தில் பொருட்களை வாங்குபோது 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கூடுதலாக இஎம்ஐ விருப்பங்கள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை தினங்களில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்டிவிகளை பார்க்கலாம்.

Nothing Phone 1

Nothing Phone 1

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட நத்திங் போன் 1 ஆனது ரூ.33,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட் இல் அனைத்து சலுகைகளையும் உட்படுத்தி ரூ.26,999 என வாங்கலாம். இதில் வங்கி சலுகைகளும் அடங்கும்.

அமோக வரவேற்பில் நத்திங் போன் 1

நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான உடன் விலை உயர்வை பெற்றது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

Samsung Galaxy S21 FE 5G

Samsung Galaxy S21 FE 5G

Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனானது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது ரூ.54,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2022 இல் ரூ.35,999 என வாங்கலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

சிறந்த தள்ளுபடியுடன் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்

சிறந்த தள்ளுபடியுடன் ப்ரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க சரியான வாய்ப்பு இதுவாகும். 32 எம்பி செல்பி கேமரா, டிரிபிள் ரியர் கேமரா. 6.4 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, 4500 எம்ஏஎச் பேட்டரி என பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

iPhone 11

iPhone 11

iPhone 11 இன் 64 ஜிபி வேரியண்ட் ரூ.54,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூ.35,999 என கிடைக்கிறது. ரூ.30,000 விலைப் பிரிவில் ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த ஐபோன் மாடலை வாங்கும்போது ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் என பல சலுகைகள் இந்த ஐபோன் மாடலுக்கு வழங்கப்படுகிறது.

Mi 5A 32-Inch Smart TV

Mi 5A 32-Inch Smart TV

Mi 5A 32-Inch Smart TV ஆனது ரூ.24,999 என விற்கப்பட்டு வந்தது. இந்த ஸ்மார்ட்டிவியானது பாதி விலையில் தற்போது கிடைக்கிறது. ரூ.24,999 என நிர்ணயிக்கப்பட்ட இந்த எம்ஐ 5ஏ 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது பிளிப்கார்ட் பிக் தீபாவளி தின விற்பனையில் ரூ.12,999 என கிடைக்கிறது.

எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்டிவி வாங்கும் போது ரூ.2250 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. பக்கா ஆண்ட்ராய்டு டிவி அனுபவம் இந்த ஸ்மார்ட்டிவியில் கிடைக்கிறது.

SAMSUNG Crystal 4K 43 inch ஸ்மார்ட்டிவி

SAMSUNG Crystal 4K 43 inch ஸ்மார்ட்டிவி

43 இன்ச் அளவுள்ள சாம்சங் க்ரிஷ்டல் டிவியானது 4கே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.52,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்டிவி ஏறத்தாழ பாதி விலையில் கிடைக்கிறது. சாம்சங் க்ரிஷ்டல் 4கே டிவியானது ரூ.29,999 என கிடைக்கிறது. வங்கி சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ என பல சலுகைகள் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale 2022: Smart TV Available in Half of Price, Smarphones in Huge Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X