Flipkart Big Diwali Sale: அலைச்சலே வேணாம்.. வீட்டில் இருந்தே தள்ளுபடியுடன் ஆர்டர் போடுங்க!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2022 மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு எதிர்பார்த்திராத அளவிற்கு சிறந்த தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டிருகிறது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையானது செப்டம்பர 30 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட் அடுத்த பண்டிகை தின விற்பனை தேதியை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை தேதி
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை தேதியை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விற்பனையானது அக்டோபர் 5 முதல் அக்டோபர் 8 வரை என நான்கு நாட்களுக்கு நடக்க இருக்கிறது. இந்த விற்பனையில் வழங்கப்படும் வங்கிச் சலுகைகள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

இது சந்தேகம் தான்..
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் அதீத தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதே தள்ளுபடிகள் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் வழங்கப்படுமா என்பது சரியாகத் தெரியவில்லை.
பிக் பில்லியன் விற்பனையில் வழங்கப்படும் அதே சலுகைகள் பிக் தீபாவளி தின விற்பனையில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை ஒரே காலக்கட்டத்தில் நடந்து வருகிறது. இரண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகின்றன.விற்பனைகளும் பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இதே சலுகைகள் பிளிப்கார்ட் பிக் தீபாவளி தின விற்பனையில் எதிர்பார்ப்பது சந்தேகம் தான். எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் தள்ளுபடியுடன் பொருட்களை வாங்கத் திட்டமிட்டிருந்தால் இப்போது வாங்கவது சிறந்தது.

10% தள்ளுபடி உறுதி..
இந்தியாவில் அடுத்த வாரம் பிக் பில்லியன் தீபாவளி விற்பனை நடத்த உள்ளதாக Flipkart அறிவித்துள்ளது. நான்கு நாட்கள் இந்த விற்பனை நடக்க இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வங்கித் தள்ளுபடி விவரங்கள்..
அதாவது ஐசிஐசிஐ வங்கி அல்லது ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
குறிப்பாக ஆக்சிஸ் பாங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தால் வரம்பற்ற கேஷ்பேக் வழங்கப்படும். நோ காஸ்ட் இஎம்ஐ போன்ற பல்வேறு சலுகைகள் இந்த தள்ளுபடி விற்பனை தினங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 நாள் முன்னதாகவே இவர்களுக்கு தள்ளுபடிகள்..
Flipkart Big Diwali Sale விற்பனையானது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஒரு சலுகை தின அறிவிப்பு அறிவிக்கப்பட்டால் அதன் சந்தா உறுப்பினர்களுக்கு 1 நாளுக்கு அதாவது 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே தொடங்கும் என்பது அறிந்ததே.
பிளிப்கார்ட் சலுகை தின விற்பனைகள் அதன் பிளஸ் உறுப்பினர்களுக்கு 1 நாளுக்கு முன்னதாகவே கிடைக்கும்.
அதேபோல் அமேசான் சலுகை தின விற்பனை அதன் பிரைம் உறுப்பினர்களுக்கு 1 நாளுக்கு முன்னதாகவே தொடங்கும்.
அதன்படி பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 1 நாளுக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 4 முதல் பிளஸ் உறுப்பினர்களுக்கு கிடைக்கத் தொடங்கும்.

பிக் தீபாவளி தின விற்பனை தள்ளுபடிகள்..
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் எந்தெந்த கேட்ஜெட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் குறிப்பிட்ட கேட்ஜெட்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பிக் தீபாவளி தின விற்பனையிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 13 தள்ளுபடி..
அதாவது ஐபோன் 13 ஆனது ரூ.50,000 என்ற விலைப்பிரிவில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இதேபோல் சில ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் டேப்லெட்களுக்கு பிக் பில்லியன் விற்பனையில் கிடைக்கும் அதே தள்ளுபடியோ அல்லது சில மாற்றங்களுடன் தள்ளுபடியோ வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வரும் நாட்களில் பிக் தீபாவளி விற்பனையில் கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் தரப்பில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications