80%வரை தள்ளுபடி, ஸ்மார்ட்போன்கள், டிவிகள் இன்னும் பல: பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை!
கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று பர்ச்சேஸிங் செய்வதற்கு பதிலாக வீட்டில் இருந்தே ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகம்
ஆன்லைன் நிறுவன வணிகம் சற்று வேகமாக வளர்ந்து வருகிறது, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சாதனை அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர்.

பிக் பில்லியன் தின விற்பனை
பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் பில்லியன் தினங்கள்(Big Billion Days) என்ற பெயரில் மெகா சலுகைகளை அறிவிப்பது வழக்கம். பிக் பில்லியன் தின விற்பனையில் ஏணைய பொருட்கள் அட்டகாச சலுகையோடு கிடைக்கும்.

விற்பனை விரைவில் தொடங்கும்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை, ஆனால் விற்பனை விரைவில் தொடங்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. பிக் பில்லியன் விற்பனை மூலம் வழங்கப்படும் சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை பிளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. இதற்கான சிறப்பு பக்கமும் பிளிப்கார்ட் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பக்கத்தில் வழங்கப்பட்ட தகவல்
பிளிப்கார்ட் பக்கத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் மிகப்பெரிய தள்ளுபடி வழங்க உள்ளது. பிளிப்கார்ட் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் 80% வரை தள்ளுபடியை வழங்குகிறது. மடிக்கணினி வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு, மடிக்கணினிகளில் 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

75% வரை தள்ளுபடி
ஸ்மார்ட் சாதனங்களுக்கு பிளிப்கார்ட் 75% வரை தள்ளுபடி வழங்குகிறது. கேமரா பாகங்கள் ரூ.849 முதல் கிடைக்கும். பிளிப்கார்ட் பக்கத்தின்படி, விற்பனையின் போது பட்டியலிடப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை பயனர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கலாம்.

10% உடனடி தள்ளுபடி
எஸ்பிஐ வங்கி அட்டை பயனர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் சிறந்த தயாரிப்புகளையும், கட்டணமில்லா EMI விருப்பத்தையும் வழங்குகிறது. இந்த இஎம்ஐ விருப்பம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிகளின் அட்டைகளுடன் கிடைக்கிறது. பஜாஜ் பின்சர்வ் அட்டைக்கான இஎம்ஐ வசதியும் இதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications