சரியான போட்டி., நமக்கு செம லக்: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே, அமேசான் கிரேட் இந்தியன் சேல்!
பல்வேறு பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கும் வகையிலான பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த தினங்களில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கும்.

ஆர்டர் செய்வதில் ஆர்வம்
கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று பர்ச்சேஸிங் செய்வதற்கு பதிலாக வீட்டில் இருந்தே ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகம்
ஆன்லைன் நிறுவன வணிகம் சற்று வேகமாக வளர்ந்து வருகிறது, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சாதனை அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர்.

பிக் பில்லியன் தின விற்பனை
பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் பில்லியன் தினங்கள்(Big Billion Days) என்ற பெயரில் மெகா சலுகைகளை அறிவிப்பது வழக்கம். பிக் பில்லியன் தின விற்பனையில் ஏணைய பொருட்கள் அட்டகாச சலுகையோடு கிடைக்கும்.

பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடி
பிளிப்கார்ட் பக்கத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் மிகப்பெரிய தள்ளுபடி வழங்க உள்ளது. பிளிப்கார்ட் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் 80% வரை தள்ளுபடியை வழங்குகிறது. மடிக்கணினி வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு, மடிக்கணினிகளில் 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய விற்பனை விழா விரைவில்
அதேபோல் அமேசானின் அடுத்த பெரிய இந்திய விற்பனை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமான டீஸரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு சலுகைகளோடு கூடிய விற்பனை விரைவில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் சரியான தேதி குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. அமேசான் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து இஎம்ஐ பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் 10% உடனடி தள்ளுபடியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை
அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு பிற வாடிக்கையாளர்களைவிட முன்னதாகவே தொடங்கும். பிரைம் சந்தாவின் விலை ஒரு வருடத்திற்கு ரூ.999 ஆகவும், ஒரு மாதத்திற்கு ரூ.129 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேட் இந்தியன் விற்பனை தொடங்கவிருப்பதையடுத்து இதுகுறித்து அறிவிக்க அமேசான் ஒரு சிறப்பு பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகள் உட்பட விற்பனைக்கு வரும் பொருட்களுக்கு நோகோஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பல்வேறு சலுகைகள்
மொபைல்கள் உள்ளிட்ட பிற பொருட்களுக்கு இதில் பல்வேறு சலுகைகளை வழங்கும் என்பதை கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை பக்கம் சுட்டிக்காட்டுகிறது. எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இந்த விற்பனை தேதியில் அமேசான் 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications