அடடா எல்லாமே வாங்கலாமே- பிளிப்கார்ட், அமேசான் பண்டிகை தின விற்பனை ஒரே சமயத்தில்:போட்டிப்போட்டு சலுகை
பல்வேறு பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கும் வகையிலான பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை
பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்களுக்கான தேதியை அறிவித்த பின் அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை தினத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை ஆகிய இரண்டுமே ஒரே சமயத்தில் இருக்கப்போகிறது. இரண்டு நிறுவனங்களுமே பலவிதமான சலுகைகளை கொண்டிருக்கிறது.

அக்டோபர் 16 ஆம் தேதிமுதல்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை தேதி அக்டோபர் 16 ஆம் தேதிமுதல் நடைபெற இருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை அக்டோபர் 17 ஆம் தேதிமுதல் நடைபெற இருக்கிறது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் 16 ஆம் தேதிமுதலே பொருட்களை வாங்கலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதே சமயத்தில் அமேசான் விற்பனை முடிவடையும் தேதி அறிவிக்கப்படவில்லை. அமேசான் சலுகை விற்பனை ஒரு மாதத்திற்கு தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பண்டிகை கால விற்பனை
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பண்டிகை கால விற்பனை தினங்களில் பல்வேறு பிரபல பிராண்டுகள் இகாமர்ஸ் தளங்களுடன் இணைந்துள்ளன. கூகுள் பிக்சல் தயாரிப்புகளான பிக்சல் 4ஏ பிக் பில்லியன் நாட்களில்தான் முதல் விற்பனைக்கு வருகிறது.

ஒன்ப்ளஸ் 8டி மாடல்
அதேபோல் மறுபுறம் பார்த்தால் ஒன்பிளஸ் தனது அடுத்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 8டி மாடலை அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது விற்பனைக்கு வரும்.

எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை
கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று பர்ச்சேஸிங் செய்வதற்கு பதிலாக வீட்டில் இருந்தே ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அதுவும் அட்டகாச சலுகையோடு கிடைக்கிறது என்றால் கேட்கவா வேண்டும்.

பிக் பில்லியன் தின விற்பனை
பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் பில்லியன் தினங்கள்(Big Billion Days) என்ற பெயரில் மெகா சலுகைகளை அறிவிப்பது வழக்கம். பிக் பில்லியன் தின விற்பனையில் ஏணைய பொருட்கள் அட்டகாச சலுகையோடு கிடைக்கும்.

இஎம்ஐ பரிவர்த்தனைகள் உட்பட பல்வேறு சலுகைகள்
அமேசானின் அடுத்த பெரிய இந்திய விற்பனை விழா விற்பனையில் பல்வேறு சலுகைகளோடு கூடிய விற்பனையை அறிவிக்கிறது. அமேசான் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து இஎம்ஐ பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் 10% உடனடி தள்ளுபடியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications