Home
News

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026.. ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை.. அதிரடி தள்ளுபடி! எப்போது தொடங்கும்?

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. ஆனால் பிளஸ், விஐபி/பிளாக் (Plus, VIP/BLACK) உறுப்பினர்கள் மற்றும் பிளிப்கார்ட் அட்டைதாரர்களுக்கு 8 அக்டோபர் 2026 முதல் அதாவது 24 மணி நேரத்திற்கு முன்கூட்டியே இந்த விற்பனைக்கு அணுகல் கிடைக்கும்.

குறிப்பாக பிளிப்கார்ட்டில் நடைபெற உள்ள இந்த சிறப்பு விற்பனையில் மின்னணுப் பொருட்கள், ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றில் சிறந்த தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தரமான ஸ்மார்ட்போன்களை இந்த சிறப்பு விற்பனையில் கம்மி விலையில் வாங்க முடியும்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026.. எப்போது தொடங்கும்

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு 10% வரை உடனடித் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகள், சூப்பர்.மணி மற்றும் பேடிஎம் வழியாக சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளும் உண்டு.

ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், ஸ்பீக்கர்கள், ப்ரொஜெக்டர் என பல்வேறு சாதனங்களை பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இதுதவிர பல சாதனங்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. எனவே புதிய சாதனங்களை வாங்க நினைக்கும் பயனர்கள் அக்டோபர் 9 வரை காத்திருக்கவும்.

மேலும் சமீபத்தில் போக்கோ நிறுவனம் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்8 5ஜி அம்சங்கள் (POCO X8 5G specifications): தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

அதுவும் 6.83-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில்1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் , 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) மூலம் போக்கோ எக்ஸ்8 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026.. எப்போது தொடங்கும்

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் உடன் இந்த போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8.6 எம்எம் தடிமன் மற்றும் 223 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த போக்கோ எக்ஸ்8 5ஜி இருக்கிறது. யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

9000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போக்கோ எக்ஸ்8 5ஜி போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.29,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2026 Starts October 9: Check All the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X