Home
News

அதிரடி காட்டும் Flipkart Sale.. சாம்சங் முதல் ஒப்போ வரை.. 40% தள்ளுபடி.. கொத்தா தூக்குவீங்க..

பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை எப்போது தொடங்கும் என்று ஆவலாக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நீங்களும் ஒருவரா? ஆமென்றால் தயாராகி கொள்ளுங்கள். அதாவது பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 (Big Billion Days Sale 2023) விற்பனை தொடங்க உள்ளது.

தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, அக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரங்களில் இந்த பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 சிறப்பு விற்பனை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள், இயர்போன் எனப் பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

அதிரடி காட்டும் Flipkart Sale.. சாம்சங் முதல் ஒப்போ வரை.. 40% தள்ளுபடி

மேலும் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்குக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் இப்போதே சில ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டியுள்ளது. அதாவது நத்திங் போன் 1, சாம்சங் கேலக்ஸி எப்13, போக்கோ எம்5, கூகுள் பிக்சல் 7 மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. மேலும் இந்த போன்களை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் பயன்படுத்தி மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

மேலும் போன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இப்போது பார்ப்போம். நத்திங் போன் 1 மாடல் ஆனது இந்தியாவில் ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் இப்போது வழங்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.23,999 விலையில் இந்த நத்திங் போன் 1 மாடலை வாங்க முடியும்.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் கேலக்ஸி எப்13 மாடலை ரூ.9,199-க்கு வாங்க முடியும். கடந்த மாதம் இந்தியாவில் விவோ வி29இ ஸ்மார்ட்போன் ரூ.26,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவோ போனை சலுகையுடன் இப்போது ரூ.24,999 விலையில் வாங்க முடியும்.

ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போன் ஆனது முன்பு இந்தியாவில் ரூ.10,499 விலையில் விற்பனை செய்ப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சலுகையின் மூலம் இந்த ஒப்போ போனை ரூ.7,999 விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் முன்பு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ரியல்மி போனை சலுகையுடன் சேர்த்து ரூ.9,499 விலையில் வாங்க முடியும்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போன் முன்பு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 போனை ரூ.5939 விலையில் வாங்க முடியும். அதேபோல் போக்கோ எம்5 போன் ஆனது கடந்த ஆண்டு ரூ.12,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட் சலுகையின் மூலம் இந்த போக்கோ எம்5 போனை ரூ.6,999 விலையில் வாங்க முடியும்.

அதிரடி காட்டும் Flipkart Sale.. சாம்சங் முதல் ஒப்போ வரை.. 40% தள்ளுபடி

ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.39,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ரெனோ 10 ப்ரோ 5ஜி போனை ரூ.35,999 விலையில் வாங்க முடியும். மேலும் மோட்டோ ஜி14 போனை ரூ.8,099 விலையிலும், மோட்டோ ஜி32 போனை ரூ.8,999 விலையிலும் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த ரெட்மி போனை ரூ.10,799 விலையில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2023: Up to 40 percent off on smartphones: check details here: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X