Home
News

Flipkart Big Billion Days Sale 2022 தேதி இது தானா? புது iPhone, Smart Tv வாங்க ரெடியா இருங்க.!

Flipkart Big Billion Days Sale 2022: இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிவிட்டது. இப்போதே பலர் தீபாவளி ஷாப்பிங்கை துவங்க திட்டம் தீட்டி வருகின்றனர். பண்டிகை காலம் என்றாலே, கட்டாயமாக புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்பது தான் நம்முடைய பழக்கமாக இருக்கிறது. இதை அறிந்த Flipkart மற்றும் Amazon போன்ற நிறுவனங்கள், இப்போது அதன் பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Flipkart Big Billion Days Sale 2022 இந்த மாதம் நடைபெறுகிறதா?

Flipkart Big Billion Days Sale 2022 இந்த மாதம் நடைபெறுகிறதா?

ஆம், பிளிப்கார்ட் நிறுவனத்துடைய Flipkart Big Billion Days Sale 2022 இந்த மாதம் எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனம் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனைக்கான தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த மாத இறுதிக்குள் இந்த சிறப்பு விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்ஸ் விற்பனை எப்போது நடைபெறும் என்ற தேதி தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

என்ன தேதியில் இந்த சிறப்பு விற்பனையை நாம் எதிர்பார்க்கலாம்?

என்ன தேதியில் இந்த சிறப்பு விற்பனையை நாம் எதிர்பார்க்கலாம்?

இதன் படி, வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி Flipkart Big Billion Days Sale 2022 லைவ் செய்யப்பட்டு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்ஸ் விற்பனையுடன், அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஷாப்பிங் சிறப்பு விற்பனையையும் இதே நேரத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இந்த முறை இரண்டு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சிறப்பு விற்பனையை லைவ் செய்யலாம்.

iPhone 13 மற்றும் iPhone 12 மீது அபார சலுகையா?

iPhone 13 மற்றும் iPhone 12 மீது அபார சலுகையா?

இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் போது, வாடிக்கையாளர்களுக்கு iPhone 13 மற்றும் iPhone 12 மீது எதிர்பார்த்ததை விடப் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Flipkart பிக் பில்லியன் டே சேல்ஸ் விற்பனை சார்ந்த தள்ளுபடிகளுடன், வங்கி சலுகைகளையும் பிளிப்கார்ட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உங்களிடம் ICICI கார்டு அல்லது ஆக்சிஸ் பேங்க் கார்டு இருந்தால், குறிப்பிட்ட தயாரிப்புகளின் மீது 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

அம்மாடியோவ்.! இன்னும் இவ்வளவு தள்ளுபடி கிடைக்க வாய்ப்பா?

அம்மாடியோவ்.! இன்னும் இவ்வளவு தள்ளுபடி கிடைக்க வாய்ப்பா?

வங்கி சலுகைகள் தவிர, உங்களுக்குக் கட்டணமில்லா EMI விருப்பமும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, உங்களுடைய பழைய போன்களை சிறந்த விலையில் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அனுமதிக்கும் எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் தவிர, இந்தியாவில் பிரபலமான ரியல்மி, போகோ, விவோ, சாம்சங் போன்ற சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கும் பெஸ்ட் தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்மார்ட் டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆக்சஸரீஸ் மீது 80% வரை தள்ளுபடி

ஸ்மார்ட் டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆக்சஸரீஸ் மீது 80% வரை தள்ளுபடி

இத்துடன், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மற்றும் ஆக்சஸரீஸ் மீதும் சிறந்த தள்ளுபடியும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உங்களுக்கு புதிய டிவி அல்லது ஸ்மார்ட் டிவி வாங்கும் திட்டம் இருந்தால், இந்த விற்பனையைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், இந்த சாதனங்கள் மீது இந்த முறை 80% வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்களுக்கு குறைந்த விலையில் ஐபோன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?

ஐபோன் 13 மற்றும் 12 வாங்க சரியான நேரம் இது தானா?

ஐபோன் 13 மற்றும் 12 வாங்க சரியான நேரம் இது தானா?

அப்போ, இந்த சிறப்பு விற்பனையைத் தவறவிடாதீர்கள். காரணம், வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 மாடலை அறிமுகப்படுத்த உள்ளதால், புதிய ஐபோனின் அறிமுகத்திற்குப் பிறகு, நிச்சயமாக ஐபோன் 13 இன் விலை குறையும். அதேபோல், ஐபோன் 12 இன் விலை இன்னும் அதிகமாகக் குறையும் என்பதனால், உங்களுக்கு இது சரியான வாய்ப்பாக அமையும். ஆப்பிள் அறிவித்த விலை குறைப்பிற்குப் பிறகு பிளிப்கார்ட் சலுகையும் கிடைத்தால் ஐபோன் 13 மற்றும் 12 சாதனங்களை நீங்கள் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை மறக்காதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days sale 2022 Sale Date and Deals On iPhone, Smart Tv Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X