Flipkart Big Billion Days Sale 2021: தரமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

|

மிகவும் எதிர்பார்த்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை விரைவில் துவங்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. அதாவது இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ எக்ஸ்3 ப்ரோ, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன், அசுஸ் ரோக் போன் 3, சாம்சங் கேலக்ஸி எஃப்62 உட்பட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

போக்கோ எம்3 ப்ரோ

போக்கோ எம்3 ப்ரோ

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.23,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.16,999-விலையில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகபோக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 7 என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் உடன் அட்ரினோ 640 ஜிபியு ஆதரவும் உள்ளது. போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளை கொண்டுள்ளது இந்தபோக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போன்.


போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி Sony IMX582 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்பு வசதிக்கு என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் சாதனத்தின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.19,999-விலையில் வாங்க முடியும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.7-இன்ச் OLED Max Vision டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U 5G எஸ்ஒசி, 108எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷனா? ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே.! ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஜப்பான் இளைஞர்!இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷனா? ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே.! ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஜப்பான் இளைஞர்!

அசுஸ் ரோக் போன் 3

அசுஸ் ரோக் போன் 3

விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.55,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் இந்த அசுஸ் ரோக் போன் 3 மாடலை ரூ.34,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. அசுஸ் ரோக் போன் 3 மாடல் ஆனது6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி, 1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அசுஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது.

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

டெலிகிராம் பயனர்களே உஷார்: டார்க் வெப் தளமாக மாறுகிறதா டெலிகிராம்? சட்டவிரோத செயல்களில் சிக்கும் பயனர்கள்..டெலிகிராம் பயனர்களே உஷார்: டார்க் வெப் தளமாக மாறுகிறதா டெலிகிராம்? சட்டவிரோத செயல்களில் சிக்கும் பயனர்கள்..

சாம்சங் கேலக்ஸி எஃப்62

சாம்சங் கேலக்ஸி எஃப்62

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.29,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை குறைந்த விலையில் வாங்க முடியும். ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட், 6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே, 64 மெகாபிக்சல் பிரைமரி கேமராஉட்பட பல்வேறு சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் லேப்டாப், டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2021: Best Offers on Poco X3 Pro, Moto Edge 20 Fusion Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X