Flipkart Big Billion Days Sale 2021: மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.!
மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை Flipkart Big Billion Days Sale 2021 எனும் சிறப்பு விற்பனையில் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் இந்த சலுகைகளை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி60
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்தின் விலை ரூ.21,999-என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.15,999-விலையில் வாங்க முடியும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட், 108எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ்20 5ஜி
மோட்டோரோலா மோட்டோ எட்ஜ்20 5ஜி சாதனத்தின் அசல் விலை ரூ.34,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் 6.7-இன்ச் OLED டிஸ்பிளே, 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 5ஜி சிப்செட், 108எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ பவர் 30வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவதுமோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் சாதனத்தின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.19,999-விலையில் வாங்க முடியும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.7-இன்ச் OLED Max Vision டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U 5G எஸ்ஒசி, 108எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி40 ஃபியூஷன்
மோட்டோ ஜி40 ஃபியூஷன் சாதனத்தின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்புவிற்பனையில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,எச்டிஆர் 10 ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி சிப்செட், 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி,டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் போக்கோ, அசுஸ், ரியல்மி, சாம்சங், விவோ, ஒப்போ, சியோமி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறுசாதனங்களையும் குறைந்த விலையில் வாங்க முடியும் என தகவல் வெளிவந்துள்ளது. இதுதவிர பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு உடனடி தள்ளுபடி, கேஷ்பேக்சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications