Home
News

Flipkart Big Billion Days Sale 2021: விற்பனையில் ரூ. 6,299 விலை முதல் சிறந்த பட்ஜெட் போன் வாங்க ரெடியா?

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 விற்பனை தேதிகளை இன்னும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், ஃபிளிப்கார்ட் பயனர்களின் கவனம் முழுக்க இப்போது இந்த சிறப்பு விற்பனைக்கான செய்திகளை நோக்கித் திரும்பியுள்ளது. எதிர்பார்க்கப்படும் சலுகைகளைப் பற்றி முன்பே அறிந்துகொள்ள ஏராளமான நெட்டிசன்ஸ்கள் இணையத்தை வலம்வந்த வண்ணம் உள்ளனர். எப்போதும் போல், Flipkart நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்களின் மீது மிகப் பெரிய தள்ளுபடியை இந்த முறையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.

சிறந்த பட்ஜெட் போன்களின் மீது அபாரமான சலுகை

சிறந்த பட்ஜெட் போன்களின் மீது அபாரமான சலுகை

அப்படி, இந்த முறை நடைபெறும் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 விற்பனையில் சிறந்த பட்ஜெட் போன்களின் மீது கிடைக்கப்பெறும் சில சிறந்த டீல்களை பற்றித் தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகமாக உள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சந்தையாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தை விளங்குகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பற்றி நாம் நினைக்கும் போது, ​​ஜியோனி, லாவா, ஐடெல் போன்ற பிற பிராண்டுகள் நமது நினைவிற்கு வந்து போகிறது.

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 செக் செய்ய மறக்காதீர்கள்

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 செக் செய்ய மறக்காதீர்கள்

உண்மையைச் சொல்லப் போனால் இந்த நிறுவனங்கள் பட்ஜெட் விலைக்கும் மலிவு விலைக்கும் இடையிலான விலை புள்ளியில் சிறந்த ஸ்மார்ட்போன் சாதனங்களை வழங்கி வருகிறது. நீங்கள் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வாங்க ஒரு நல்ல மாடலை தேடுகிறீர்களானால், ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 தான் நிச்சயமாக நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இடமாக இருக்கும். உங்களின் தேடும் நேரத்தை கம்மி படுத்த நாங்கள் கீழே சில சிறந்த பட்ஜெட் விலை போன்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவற்றை ஒரு முறை செக் செய்து பார்த்து உங்கள் முடிவைத் தேர்வு செய்யுங்கள்.

ரூ. 10,000 பட்ஜெட் விலையின் கீழ் புது ஸ்மார்ட்போன் வாங்க Flipkart Big Billion Days Sale 2021

ரூ. 10,000 பட்ஜெட் விலையின் கீழ் புது ஸ்மார்ட்போன் வாங்க Flipkart Big Billion Days Sale 2021

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2021 இல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான பட்ஜெட் விலைக் பிரிவு பிளிப்கார்ட் பயனர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுவாக, இந்த பிரிவின் கீழ் பயனர்கள் வாங்க நினைக்கும் ஸ்மார்ட்போன்கள் சுமார் ரூ. 10,000 என்ற பட்ஜெட் விலை முதல் வாங்க வகைப்படுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் 2021 விற்பனையில் இரண்டு பிராண்டுகள் மிகப்பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. உதாரணமாக, ஜியோனி தனது சலுகையைச் சிறந்ததாக மாற்றியுள்ளது.

ரூ. 6,299 என்ற விலை முதல் புது போன் வாங்க வாய்ப்பு

ரூ. 6,299 என்ற விலை முதல் புது போன் வாங்க வாய்ப்பு

ஜியோனி மேக்ஸ், ஜியோனி மேக்ஸ் ப்ரோ, ஜியோனி எஃப் 8 நியோ போன்ற பல ஸ்மார்ட்போன்களை நீங்கள் வரப்போகும் சிறப்பு விற்பனையின் போது சிறந்த தள்ளுபடி உடன் வாங்கலாம். இவற்றில் சில ஸ்மார்ட்போன்களின் விலை நீங்கள் எதிர்பார்த்திடாத வகையில் வெறும் ரூ. 6,299 என்ற விலை முதல் தொடங்குகிறது. இருப்பினும், வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் 2021 விற்பனைக்கான அதிகாரப்பூர்வ தள்ளுபடி விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Lava Z61 Pro போன்ற பட்ஜெட் போன்களை கூடுதல் சலுகையுடன் வாங்க ஆசையா?

Lava Z61 Pro போன்ற பட்ஜெட் போன்களை கூடுதல் சலுகையுடன் வாங்க ஆசையா?

இதேபோல், லாவா நிறுவனமும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த தள்ளுபடியை வரவிருக்கும் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2021 இல் வழங்கும் என்று கூறப்படுகிறது. லாவா முதன்மையாக விசைப்பலகை வடிவமைப்பு கொண்ட பியூச்சர் போன்களுக்கான நிறுவனமாக அறியப்படுகிறது. அதே நேரத்தில், Lava Z61 Pro போன்ற பட்ஜெட் விலை போன்களையம் நிறுவனம் தனது வசம் வைத்துள்ளது. உதாரணமாக, இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புரோ மாடல் போனாகும்.

பிளிப்கார்ட்டின் மார்க்யூ பிராண்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிளிப்கார்ட்டின் மார்க்யூ பிராண்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மீண்டும், பிளிப்கார்ட் இன்னும் லாவா பட்ஜெட் போன்களின் சிறப்புத் தள்ளுபடி விலையை இன்னும் அறிவிக்கவில்லை. ஃப்ளிப்கார்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் உட்பட அதன் சொந்த பிராண்ட் எலக்ட்ரானிக்ஸின் கீழ் ஏராளமான எலெக்ட்ரிக் சாதனங்களை விற்பனை செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பிளிப்கார்ட்டின் மார்க்யூ பிராண்ட் பலவிதமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ளது. இவை கவர்ச்சிகரமான விலைக் குறியுடன் வருகின்றன. வரவிருக்கும் Flipkart Big Billion Days Sale 2021 இந்த தொலைப்பேசிகளையும் நீங்கள் சிறந்த தள்ளுபடி உடன் வாங்க முடியும்.

Flipkart Big Billion Days Sale 2021 விற்பனையைத் தவறவிடாதீர்கள்

Flipkart Big Billion Days Sale 2021 விற்பனையைத் தவறவிடாதீர்கள்

பட்டியலில் சேரும் பட்ஜெட் டேக் கொண்ட ஐடெல் போன்களும் உள்ளன. தற்போது, ​​இந்த தொலைப்பேசி மாடல்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும் என்று பிளிப்கார்ட் டீஸ் செய்துள்ளது. பிளிப்கார்ட்டின் பிக் பேங் வெளியீட்டின் ஒரு பகுதியாகச் செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று சரியான தள்ளுபடி சதவீதம் வெளியிடப்படும். ஆயினும்கூட, நீங்கள் ஒரு பட்ஜெட் விருப்பத்தில் இன்னும் சிறந்த சலுகைகளை தேடுகிறீர்களானால், Flipkart Big Billion Days Sale 2021 விற்பனையைத் தவறவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2021 Best Deals On Budget Phones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X