Flipkart Big Billion Days: உங்க பழைய போனை விற்றாலே போதும், புது 5G போன் வாங்கலாம்!

|

உள்நாட்டு ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், பிக் பில்லியன் தின விற்பனையை அறிவிக்க இருக்கிறது. இந்த விற்பனையானது செப்டம்பர் 23 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை நடக்க இருக்கிறது.

ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் தொடங்கி ஏராளமான எலக்ட்ரானிக் தயாரிப்புகள் இந்த விற்பனை தினங்களில் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இன்னும் 2 நாட்கள் மட்டும் காத்திருங்கள். குறிப்பாக ஸ்மார்ட்போன்கள்.

5ஜி சேவை கொண்ட ஸ்மார்ட்போன்கள்

5ஜி சேவை கொண்ட ஸ்மார்ட்போன்கள்

அடுத்த மாதம் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாக இருக்கிறது. உங்கள் ஸ்மார்ட்போனை மேம்படுத்த திட்டமிட்டிருந்தால், இது சரியான சமயம் ஆகும்.

காரணம் சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் வாங்கலாம். தள்ளுபடியுடன் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

POCO M4 5G

POCO M4 5G

ரூ.10,000க்கு 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால் POCO M4 5G சிறந்த தேர்வாக இருக்கும்.

ரூ. 9,749 விலையில் POCO M4 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாகும்.

இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு HD+ 90Hz டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Realme 9i 5G

Realme 9i 5G

ரூ.10,000 முதல் ரூ.15,000 விலைப் பிரிவு வரை ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான தேர்வாகும்.

Realme 9i 5G ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என்ற விலையில் கிடைக்கிறது. இது நுழைவு நிலை 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. லேசர் லைட் டிசைன் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

POCO X4 Pro 5G

POCO X4 Pro 5G

மிட்ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போனாக POCO X4 Pro 5G இருந்தது.

இந்த நிலையில் POCO X4 Pro 5G ஸ்மார்ட்போன் வெறும் ரூ.13,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

120Hz Fluid AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. 64MP உயர் தெளிவுத்திறன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

இத்தனை அம்சங்களும் குறைந்த விலையில் 5ஜி ஆதரவுடன் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Samsung Galaxy F23 5G

Samsung Galaxy F23 5G

ரூ.10,000 விலைப் பிரிவில் 5ஜி ஆதரவுடன் சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டால்.. இது சிறந்த தேர்வாகும்.

ரூ. 10,999 என்ற விலைப் பிரிவில் Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

vivo T1 5G

vivo T1 5G

ரூ.13,999 என்ற விலையில் vivo T1 5G ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் இதுவாகும்.

moto g62 5G

moto g62 5G

moto g62 5G ஸ்மார்ட்போனானது ரூ.14,499 விலையில் கிடைக்கிறது. இது ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனாகும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 120 ஹெர்ட்ஸ் FHD+ டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G

Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G

ரூ.19,999 விலையில் Xiaomi 11i ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. MediaTek Dimensity 920 5G சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. இதில் 108MP பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days: Right time to buy 5G smartphones With Great discounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X