70,000 பேருக்கு வேலை வாய்ப்பு: பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு!

|

ஆன்லைன் வர்த்தக முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பிளிப்கார்ட் புதிதாக 70,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை

எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை

கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று பர்ச்சேஸிங் செய்வதற்கு பதிலாக வீட்டில் இருந்தே ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகம்

வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகம்

ஆன்லைன் நிறுவன வணிகம் சற்று வேகமாக வளர்ந்து வருகிறது, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சாதனை அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர்.

அமேசான், பிளிப்கார்ட்

அமேசான், பிளிப்கார்ட்

உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனமாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் ஆகும். சமீபத்திய அறிமுகமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ரிலையன்ஸ் டிஜிட்டலை அறிமுகம் செய்து நேரடி போட்டியில் இறங்கியுள்ளது.

அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!

பிக் பில்லியன் தின விற்பனை

பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் பில்லியன் தினங்கள்(Big Billion Days) என்ற பெயரில் மெகா சலுகைகளை அறிவிப்பது வழக்கம். பிக் பில்லியன் தின விற்பனையில் ஏணைய பொருட்கள் அட்டகாச சலுகையோடு கிடைக்கும்.

 புதிய தற்காலிக பணிகள்

புதிய தற்காலிக பணிகள்

எனவே இந்த பிக் பில்லியன தின காலக்கட்டத்தின் போது ஆர்டர்கள் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு ஆண்டுதோறும் புதிய தற்காலிக பணிகளை உருவாக்கி பிளிப்கார்ட் நிரப்பும்.

70,000 பேருக்கு வேலைவாய்ப்பு

70,000 பேருக்கு வேலைவாய்ப்பு

கடந்தாண்டு விற்பனையைவிட இந்தாண்டு விற்பனை 25 முதல் 30 சதவீதம் அதிகமாக இருக்கும் என பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து நேரடியாக சுமார் 70,000 பேரையும், தற்காலிக பணியாளர்களாக 1.4 லட்சம் பேரை வைத்து நிரப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேரடியாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days: Creates Over 70,000 Direct Jobs and Lakhs Indirect Seasonal Jobs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X