Home
News

விட்றாதீங்க.. ஒரே நாளில் தொடங்கும் Flipkart - Amazon விற்பனை.. எதில் நிறைய ஆபர், டிஸ்கவுண்ட் கிடைக்கும்?

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது அதன் அடுத்த சிறப்பு விற்பனைக்கான தேதிகளை அறிவித்துள்ளது. பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Big Billion Days Sale 2025) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இது, வருகிற 2025 செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமும் கூட அதன் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 க்கான (Great Indian Festival Sale 2025) தேதிகளை அறிவித்துள்ளது. இதுவும் கூட 2025 செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று தான் தொடங்குகிறது. இருப்பினும், இந்த விற்பனை நிகழ்வு எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பதை பிளிப்கார்ட் இன்னும் அறிவிக்கவில்லை.

ஒரே நாளில் தொடங்கும் Flipkart - Amazon விற்பனை.. எதில் நிறைய ஆபர்?

வழக்கம் போல, "பிளிப்கார்ட் மெம்பர்களுக்கு" முன்கூட்டிய அணுகல் கிடைக்கும். அதாவது செப்டம்பர் 23 ஆனது அனைவருக்குமான அணுகலை வழங்கும். அதற்கு ஒருநாள் முன்பாகவே, அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி முதலே பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளிப்கார்ட் பிளாக் மெம்பர்கள் - பிக் பில்லியன் டேஸ் சேல் 2025-க்கான அணுகலை பெறுவார்கள்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025-ன் கீழ் என்னென்ன தயாரிப்புகள் மீது என்னென்ன ஆபர், எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்? பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையின் போது, ​​ஆப்பிள், சாம்சங் மற்றும் மோட்டோரோலா போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2025-யின் போது ஐபோன் 16 (iPhone 16), சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus 3 Buds) ஆகியவைகள் மீது நல்ல தள்ளுபடி கிடைக்கும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

மேலும் இன்டெல் பிசிக்கள், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிரன்ட்-லோட் வாஷிங் மெஷின்கள் போன்ற பிற எலெக்ட்ரானிக் டிவைஸ்களையும் "ஒப்பீட்டளவில்' மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். கூடுதலாக ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025-ன் கீழ் என்னென்ன தயாரிப்புகள் மீது என்னென்ன ஆபர், எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்? அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025-ன் சாம்சங், ஆப்பிள், ஐக்யூ (iQOO) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் மீது நல்ல தள்ளுபடி கிடைக்கும்

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எம்06 5ஜி (Galaxy M06 5G), கேலக்ஸி எம்16 5ஜி (Galaxy M16 5G), கேலக்ஸி ஏ55 5ஜி (Galaxy A55 5G), கேலக்ஸி ஏ56 5ஜி (Galaxy A56 5G) மற்றும் கேலக்ஸி ஏ36 5ஜி (Galaxy A36 5G) ஆகிய மாடல்கள் மீது நல்ல ஆபர் கிடைக்கும்.

கூடுதலாக எஸ்பி (SBI) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகள் உட்பட 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியை பெற முடியும். மேலும் எச்பி (HP), போட் (Boat) மற்றும் சோனி (Sony) போன்ற பிராண்டுகளின் தயாரிப்புகள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம்.

மேலும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 இல் எல்ஜி (LG), சாம்சங் (Samsung), ஹயர் (Haier) மற்றும் கோத்ரேஜ் (Godrej) ஆகிய பிராண்டுகளின் வீட்டு உபயோகப் பொருட்கள் மீது 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் அமேசான் இந்தியா அறிவித்துள்ளது. நீங்கள் எதை வாங்கினாலும் சரி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே விலைகளை ஒப்பிட்டு பாத்துவிட்டு, எங்கு நல்ல ஆபர் கிடைக்கிறதோ அங்கு வாங்கும்படி பரிந்துரைக்கிறோம் .

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale Amazon Great Indian Festival Sale Both Starts Sep 23 Which Offers More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X