பொளந்து கட்டு.. Flipkart Big Billion Days 2024 விற்பனையில் வெறும் ரூ.18,000 க்கு Apple iPad.. என்ன மாடல்?
Flipkart Big Billion Days 2024 Sale: பிளிப்கார்ட் வலைதளத்தின் மிகவும் பிரபலமான சிறப்பு விற்பனைகளில் ஒன்றான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2024 சேல் ஆனது இம்மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிளிப்கார்ட் நிறுவனமானது தனது இ-காமர்ஸ் வலைத்தளத்தில் பல்வேறு வகையான டீல்களை 'டீஸ்' செய்ய தொடங்கி உள்ளது. அவைகளில் ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் (Apple iPad 9th gen) மீதான 'டீல்' மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. அதென்ன டீல்? 2024 இல் ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் மாடலை நம்பி வாங்கலாமா?
என்ன டீல்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ் கண்டறிந்த பிளிப்கார்ட் டீல் லிஸ்ட்டின் படி, பிக் பில்லியன் டேஸ் 2024 விற்பனையின் போது ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் (வைஃபை, 64ஜிபி) வேரியண்ட் ஆனது ரூ.18,XXX க்கு வாங்க கிடைக்கும். இந்த சலுகை விலையின் கடைசி மூன்று இலக்கங்கள் விற்பனை தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அல்லது விற்பனை தொடங்கிய பின்னர் வெளியிடப்படும்.

ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் (வைஃபை, 64ஜிபி) மாடல் ஆனது ஐபேட் 10.2 (iPad 10.2) என்றும் அழைக்கப்படுகிறது, நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2021 இல் ரூ.30,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிளிப்கார்ட் டீல் விலையை உங்களால் அடைய முடிந்தால், உங்களுக்கு ரூ.11,900 முதல் ரூ.12,900 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.
இந்த தள்ளுபடி பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2024 சேலில் மட்டுமே கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் மாடலை இப்போதே வாங்க விரும்பினால், பிளிப்கார்ட்டில் தற்போது இது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. எனவே சிறிது நாட்கள் காத்திருந்து, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடங்கிய உடன் இதை வாங்குவது தான் லாபம்!
லாபமெல்லாம் இருக்கட்டும்? 2021 இல் வந்த ஆப்பிள் ஐபேட் 9த் ஜென்-ஐ 2024 இல் நம்பி வாங்கலாமா உண்மையில் இது அறிமுகமாகி சில வருடங்கள் ஆகிறது தான். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது கடந்த செப்டம்பர் 2021 இல் அறிமுகமானது. இதற்கிடையில், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு உலகங்களில் அறிமுகம் செய்யப்பட்ட டேப்லெட்டுகளும், அவைகளின் அம்சங்களும், வடிவமைப்பும் "பயங்கரமாக" அப்டேட் ஆகிவிட்டன தான்.
இருப்பினும், ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் ஆனது இன்னமும் ஒரு சிறந்த மதிப்புமிக்க ஐபேட் (அல்லது டேப்லெட்) ஆக கருதப்படுகிறது, ஏனெனில் இது மிகவும் சக்தி வாய்ந்த ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப் உடன் வருகிறது. இது பெரும்பாலான அன்றாட பணிகளுக்கு (சோஷியல் மீடியா ஸ்க்ரோலிங் / போட்டோ எடிட்டிங் உட்பட) போதுமானதாக இருக்கிறது.
இது பழைய ஐபேட் மாடலாக இருந்தாலும் கூட, நீங்கள் பிரீமியம் ஐபேட் ஓஎஸ் (iPadOS) அனுபவத்தை பெறுவீர்கள். மேலும் ஆப்பிள் நிறுவனம் இதற்கு ஐபேட் ஓஎஸ் 18 உள்ளிட்ட அப்டேட்களையும் வழங்கும். நீங்கள் பெரிய தேவையுள்ள கோப்புகள் அல்லது பதிவிறக்கங்களை இயக்காத வரை, இந்த ஐபேட்டின் 64ஜிபி ஸ்டோரேஜ் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது.
ஒருவேளை கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், லைட்னிங் ஓடிஜி கேபிள் மூலம் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்கை பயன்படுத்தலாம். அதனுடன் ஆப்பிள் ஸ்மார்ட் கீபோர்ட் (Apple Smart Keyboard) மற்றும் ஆப்பிள் பென்சில் 1ஸ்ட ஏஜன் (Apple Pencil 1st gen) போன்ற இணக்கமான அக்ஸசெரீஸ்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
இதுதவிர்த்து ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் மாடலில் - ஹெட்ஃபோன் ஜாக், சென்டர் ஸ்டேஜ் கேமரா, முன்பக்க டச் ஐடி, 10 மணிநேர பேட்டரி லைஃப், 12எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 10.2-இன்ச் FHD+ LCD டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications








