வாரி தூக்குவீங்க.. போன்களுக்கு 80% வரை தள்ளுபடி.. பட்டைய கிளப்பும் Flipkart Sale..
மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 (Big Billion Days Sale 2023) விற்பனை ஆனது வரும் அக்டோபர் 8-ம் தேதி தேதி தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களைக் குறைந்த விலையில் வாங்க முடியும்.
அதாவது மொபைல், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட், வாஷிங்மெஷின், இயர்போன் உள்ளிட்ட பல சாதங்கள் கம்மி விலையில் வாங்க கிடைக்கும். மேலும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் அக்டோபர் 7-ம் தேதி முதல் இந்த சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நேற்று கூட நத்திங் போன் 1,சாம்சங் கேலக்ஸி எப்13, போக்கோ எம்5, கூகுள் பிக்சல் 7 உள்ளிட்ட போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டது. மேலும் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதங்களை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
குறிப்பாக அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஆப்பிள் (Apple), ஐக்யூ (iQOO), ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung), ரியல்மி (realme) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் மீது கணிசமான தள்ளுபடிகள் கிடைக்கும். மேலும் பல மொபைல் மாடல்களுக்கு 80% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பிளிப்கார்ட் அதன் மிக முக்கியமான ஒப்பந்தங்களை விற்பனை தொடங்கும் வரை ரகசியமாக வைத்திருக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறது. ஐபோன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்படும், அதே நேரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள் அக்டோபர் 3 ஆம் தேதி டீஸ் செய்யப்படும். சியோமி ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடும்.பிக்சல் போன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்படும்
மேலும் ஒப்போ போன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியிடப்படும். எனவே இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை ஆனது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இன்று மிகவும் அதிக எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் முதல் முறையாக விற்பனைக்கு வர இருக்கிறது. இதுகுறித்து விரிவான தகவலை இப்போது பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா வருகிறது. இதில், மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனை ரூ.20,999 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.22,999 விலையில் வாங்க முடியும். மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) பேக் பேனல் கொண்டுள்ளது. பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் லெதர் மற்றும் கிளாஸ் பேக் பேனல் வேரியண்ட் ஆப்சன் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








