எதை வாங்கலாம்.,எதை விடலாம்னு தெரியலயே?-ஸ்மார்ட்போன்களுக்கு அதீத தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின 2021 விற்பனை தற்போது நேரலையில் இருக்கிறது. இதில் மொபைல் போன்கள் உட்பட பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021 அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் உறுப்பினர்களுக்கு பிரத்யேகமாக அதன் தளங்கள் ஓபன் செய்யப்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு பிறகும் அனைவருக்கும் இந்த விற்பனை சலுகை கிடைக்கிறது. அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும் இந்த விற்பனை அக்டோபர் 10 ஆம் தேதி வரை நேரலையில் இருக்கிறது. பண்டிகை கால விற்பனையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விற்பனையில் பிளாட் தள்ளுபடிகள் மற்றும் தொகுக்கப்பட்ட சலுகைகள் மட்டுமின்றி பல மினி ஃப்ளாஷ் விற்பனை வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் முதல் நாளில் கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையும் தற்போது நேரலையில் இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின 2021 விற்பனையில் மொபைல் போன்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 12, 12 மினி
ஆப்பிளின் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகியவை இந்தவாரம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.49,999 ஆகவும் ஐபோன் 12 மினி 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.37,999 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் இந்த சாதனம் அறிமுகப்பட்ட நாளில் இருந்து தற்போது இந்த சாதனம் மிக் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதேபோல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ (ரூ.26,999)
பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் ஐபோன் எஸ்இ சாதனத்துக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்இ சாதனம் ரூ.39,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.26,999 ஆக கிடைக்கிறது. நீங்கள் உங்கள் சாதனத்தை ஐபோனாக மேம்படுத்த விரும்பினால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

கூகுள் பிக்சல் 4ஏ
பிக்சல் ஸ்மார்ட்போன் வாங்குவது உங்கள் இலக்காக இருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்துக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தின் விலை ரூ.31,999 ஆக இருந்த நிலையில் தற்போது தள்ளுபடி அறிவிப்போடு இந்த சாதனம் ரூ.25,999 ஆக இருக்கிறது. அதேபோல் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ சாதனத்துக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.23,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.16,999 ஆக இருக்கிறது. இதில் 48 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 20 மெகாபிக்சல் முன்புற கேமராவுடன், 5160 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ரூ.15,000 விலைப்பிரிவில் சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் (ரூ. 19,999)
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் சாதனத்துக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் சாதனம் ரூ.24,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.19,999 ஆக இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் 6ஜிபி ரேம், 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications