Home
News

அதிரடி காட்டும் பிளிப்கார்ட் ஆஃபர்.. 128GB மெமரி.. 50MP கேமரா.. மலிவு விலையில் விவோ போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 (Big Billion Days Sale 2023) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் அசத்தலான 5ஜி போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G) போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடி காட்டும் பிளிப்கார்ட் ஆஃபர்.. மலிவு விலையில் விவோ போன்..

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே கம்மி விலையில் ஒரு நல்ல 5ஜி போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த விவோ எ2எக்ஸ் 5ஜி போனை வாங்குவது நல்லது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். அதேபோல் சக்திவாய்ந்த சிப்செட் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது மீடியாடெக் Dimensity 6020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

கேமிங் பயனர்கள் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த மீடியாடெக் Dimensity 6020 சிப்செட். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனில் 8எம்பி செல்பி கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

அதிரடி காட்டும் பிளிப்கார்ட் ஆஃபர்.. மலிவு விலையில் விவோ போன்..

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த போன். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Day Sale: Vivo T2X 5G Phone Available at Affordable Price: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X