ப்ளிப்கார்ட் அதிரடி : ஐபோன் 7, 6எஸ், 5எஸ் கருவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி.!

Written By:

ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனம் ஆகிய இரண்டும் ஒன்றுகூடி ஆப்பிள் விற்பனை திருவிழா ஒன்றை நிகழ்த்துகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச்களும் உடன் ஆப்பிள் பாகங்கள் ஆனது கூடுதல் ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் மூலம் தள்ளுபடி விகிதத்தில் விற்கப்படுகின்றன.

குறிப்பாக ஐபோன் 7 கருவிக்கு இந்த சிறப்பு தள்ளுபடியின்கீழ் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 7 கருவிக்கு என்ன தள்ளுப்படி..? மேலும் பிற ஐபோன் மடல்கள் மற்றும் ஐபோன் பாகங்கள் ஆகியவைகளுக்கு என்னென்ன தள்ளுபடி என்பதை பற்றிய விவரமான தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

ஐபோன் 7 கருவிகளுக்கு எக்ஸ்சேன்ஜ் சலுகையின்கீழ் ரூ.5,000/- தள்ளுப்படி வழங்கபடுகிறது மற்றும் மறுபக்கம் ஐபோன் 6 கருவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.7,990/- தள்ளுப்படி வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் தொடர் 1-க்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி

தள்ளுபடி

அப்படியாக ஐபோன் 7 அக்கருவியின் 32ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபிக்கு வகைகள் தள்ளுபடியின் விலைகளின் கீழ் முறையே ரூ.55,000/-, ரூ.65,000/- மற்றும் ரூ.75,000/-க்கு விற்கப்படுகின்றன.

ரூ.23,000/- வரை

ரூ.23,000/- வரை

மேலும் ப்ளிப்கார்ட் ரூ.23,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுப்படியை வழங்குகிறது, இதற்கு முன்பு ரூ.20,000/- வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஐபோன் 6எஸ் பிளஸ் கருவிக்கு தான் அதிகப்படியான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த தள்ளுபடியில் நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் தொலைபேசி அடிப்படையில் தள்ளுப்படி வேறுபடும். உடன் கூடுதலாக, ஆக்சிஸ் வங்கி கடன் அட்டைகளுக்கு கூடுதலாக 5 சதவீதம் உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ரூ.5000/- விலைக்குறைப்பு

ரூ.5000/- விலைக்குறைப்பு

ஐபோன் 6 கருவியின் 16ஜிபி விண்வெளி சாம்பல் மாறுபாட்டில் ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பை ப்ளிப்கார்ட் வழங்குகிறது. இக்கருவியில் ரூ.5000/- விலைக்குறைப்பு ஏற்படுத்தியது மட்டுமின்றி ரூ.24,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 6எஸ் பிளஸ் கருவிக்கு அதிக எக்ஸ்சேன்ஜ் விலை வழங்கப்படுகிறது.

ரூ.7,990/-க்கு

ரூ.7,990/-க்கு

மேலும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிக்கு அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளிலும் கூடுதல் 5 சதவீத தள்ளுப்படி வழங்கப்படுகிறிது. ஒருவேளை நீங்கள் ஒரு முழு எக்ஸ்சேன்ஜ் தொகையை பெறுகிறீர்கள் என்றால் ஐபோன் 6 கருவியை ரூ.7,990/-க்கு (ஃப்ளிப்கார்ட் விலை ரூ.31,990/-) வாங்க முடியும்.

ஐபோன் 5எஸ்

ஐபோன் 5எஸ்

ஐபோன் 5எஸ் அக்கருவியின் 16ஜிபி மாறுபாட்டையும் நீங்கள் வெறும் ரூ.19,999/-க்கு பெறமுடியும். இந்த கருவிக்கு ரூ.15,000/- வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதால் அதன் மூலம் இக்கருவியை வெறும் ரூ4,999/-கு நீங்கள் பெறலாம்.

ஜனவரி 13 வரை மட்டுமே

ஜனவரி 13 வரை மட்டுமே

ப்ளிப்கார்ட் வழியாக ஆப்பிள் அதன் ஆப்பிள் வாட்ச் தொடர் 1 ஸ்மார்ட்வாட்ச் மற்றும் தொடர் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆகிய கருவிகளிலும் தள்ளுபடியை நிகழ்த்தியுள்ளது. மேலும் ஆப்பிள் பாகங்களுக்கு 50% வரையிலாக தள்ளுபடியும், கீபோர்ட் மற்றும் மவுஸ்களுக்கு 25% வரையிலாக தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் திருவிழா ஜனவரி 13 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் மிகச் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Flipkart Apple Fest Deals: Discounts on iPhone 7, Apple Watch, and More. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்