நம்பமுடியாத விலைகுறைப்புகளில் சிக்கிய டாப் ஸ்மார்ட்போன்கள்.!

|

பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனைக்கு பிறகு, ப்ளிப்கார்ட் இப்போது அதன் வலைத்தளத்தில் ஒரு மூன்று நாட்கள் நீடிக்கும் புதிய 'பின்ச் டேஸ்' விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை நிகழும் இந்த விற்பனை திருவிழாவில் லெனோவா கே 8 பிளஸ், கேலக்ஸி ஆன்5, கேலக்ஸி ஜே3 ப்ரோ மற்றும் பிற கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்று இ-காமர்ஸ் தளம் அறிவித்துள்ளது.

நம்பமுடியாத விலைகுறைப்புகளில் சிக்கிய டாப் ஸ்மார்ட்போன்கள்.!

அறிவிக்கப்பட்டுள்ள புதிய பின்ச் டேஸ் விற்பனையில் மின்னணு, சமையலறை உபகரணங்கள், ஃபேஷன் ஆடை, வீட்டு பொருட்கள் மற்றும் தளபாடங்கள் ஆகியவைகளுக்கும் சலுகைகள் உண்டு. குறிப்பாக, பிக்சல் 2, ஒன்ப்ளஸ் 5டி, மிஏ1 மற்றும் ஒரு விவோ சாதனம் ஆகிய ஸ்மார்ட்போன்களின் பெயரும் விற்பனை சார்ந்த விளம்பர பக்கத்தில் காணப்படுகிறது.

'இந்த ஆண்டின் ஹீரோ'

'இந்த ஆண்டின் ஹீரோ'

சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடலை 'இந்த ஆண்டின் ஹீரோ' என்று அறிவித்துள்ள ப்ளிப்கார்ட் இதன் சலுகை விலையை கண்டுபிடித்தால் அது இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. உடன் எச்டிஎப்சி பற்று மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இந்த விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கும் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் சலுகை விவரங்களை பொறுத்தமட்டில்...

1. கேலக்ஸி ஜே3 ப்ரோ, 2 ஜிபி ஆனது ரூ.6,990/-க்கு கிடைக்கும்:

1. கேலக்ஸி ஜே3 ப்ரோ, 2 ஜிபி ஆனது ரூ.6,990/-க்கு கிடைக்கும்:

இதன் அறிமுக விலை ரூ.8,490/- ஆகும். அம்சங்களை பொறுத்தமட்டில், எஸ் பைக் பயன்முறை, 5 அங்குல எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 செயலி ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

2. கேலக்ஸி ஆன்5 ஆனது ரூ.6,490-க்கு கிடைக்கும்:

2. கேலக்ஸி ஆன்5 ஆனது ரூ.6,490-க்கு கிடைக்கும்:

2015 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஆன்5 பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் எக்ஸிநோஸ் 3475 செயலி, 1.5ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 5.1 மற்றும் ஒரு 2600எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

3. கேலக்ஸி ஆன் மேக்ஸ், 4 ஜிபி ஆனது ரூ.14,900/-க்கு கிடைக்கும்:

3. கேலக்ஸி ஆன் மேக்ஸ், 4 ஜிபி ஆனது ரூ.14,900/-க்கு கிடைக்கும்:

ரூ.16,900/-க்கு அறிமுகமான இக்கருவியின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், 4ஜிபி ரேம், 1.69ஜிகாஹெர்ட்ஸ் அக்டா-கோர் மீடியா டெக் எம்டிகே பி25 செயலி, ஆண்ட்ராய்டு நௌவ்கட் மற்றும் இரட்டை சிம் ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.

4. லெனோவா கே 8 பிளஸ் ஆனது ரூ.8,999/-க்கு கிடைக்கும்:

4. லெனோவா கே 8 பிளஸ் ஆனது ரூ.8,999/-க்கு கிடைக்கும்:

கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.10,999/-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட லெனோவா கே8 பிளஸ்-ன் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, 4000எம்ஏஎச் பேட்டரி, 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி25, 5.2 அங்குல டிஸ்பிளே ஆகியவைகளை கொண்டுள்ளது.

5. ஒப்போ எப்3 பிளஸ்,6ஜிபி ஆனது ரூ.17,990/-க்கு கிடைக்கும்:

5. ஒப்போ எப்3 பிளஸ்,6ஜிபி ஆனது ரூ.17,990/-க்கு கிடைக்கும்:

இதன் அசல் விலை ரூ.22,990/- ஆகும். இதன் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், 4ஜிபி, 1.95ஜிகாஹெர்ஸ் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலி, 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 ஆகியவைகளை கொண்டுள்ளது.

6. ஹானர் 9ஐ, 4 ஜிபி ரேம் ஆனது ரூ.17,999/-க்கு கிடைக்கும்:

6. ஹானர் 9ஐ, 4 ஜிபி ரேம் ஆனது ரூ.17,999/-க்கு கிடைக்கும்:

மொத்தம் நான்கு கேமராக்கள் கொண்ட இதன் அசல் விலை ரூ.19,999/- ஆகும் இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் இதன் இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் இரட்டை முன் கேமராக்கள் தான்.

7. மோட்டோ எக்ஸ் 4, 4ஜிபி ரேம் ஆனது ரூ.20,999/-க்கு கிடைக்கும்:

7. மோட்டோ எக்ஸ் 4, 4ஜிபி ரேம் ஆனது ரூ.20,999/-க்கு கிடைக்கும்:

இதன் பிரதான அம்சங்களை பொருத்தமட்டிலும் 4 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 630 ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.22,999/- என்பது குறிப்பிடத்தக்கது.

8. மோட்டோ இசெட்2 பிளே, 4 ஜிபி ரேம் ஆனது ரூ.24,999/-க்கு கிடைக்கும்:

8. மோட்டோ இசெட்2 பிளே, 4 ஜிபி ரேம் ஆனது ரூ.24,999/-க்கு கிடைக்கும்:

ரூ.3,000/- விலைக்குறைப்பை பெற்றுள்ள இதன் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், ஸ்னாப்டிராகன் 626, மற்றும் ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது.

9. மி மிக்ஸ் 2, 6 ஜிபி ஆனது ரூ.32,999/-க்கு கிடைக்கும்:

9. மி மிக்ஸ் 2, 6 ஜிபி ஆனது ரூ.32,999/-க்கு கிடைக்கும்:

இந்த தொலைபேசி மற்ற நாட்களில் ரூ.37,999/-க்கு விற்கப்படுகிறது. இதன் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.99 அங்குல டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 835 மூலம் இயக்கப்படுகிறது.

10. எச்டிசி யூ11 ஆனது ரூ.44,999/-க்கு கிடைக்கும்:

10. எச்டிசி யூ11 ஆனது ரூ.44,999/-க்கு கிடைக்கும்:

மற்ற நாட்களில் இக்கருவி ரூ.53,990/-க்கு விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விற்பனையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள சலுகைகளில் மிகசிறந்த சலுகையாக இது பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart announces New Pinch Days sale, big discounts on Lenovo K8 Plus, Mi Mix 2, Galaxy phones and more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X