ஃபிளிப்கார்ட்டில் ஹானர் விழாக்கால விற்பனை: ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.4 ஆயிரம் வரை தள்ளுபடி

|

இந்த ஆண்டு முடிவை எட்டியுள்ள நிலையில் இ-காமர்ஸ் தளங்கள், பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் சேர்ந்து, தளத்தில் உள்ள தயாரிப்புகளின் விலையில் இருந்து, அட்டகாசமான தள்ளுபடியை அளித்து விற்பனையில் விறுவிறுப்பாக உள்ளன.

ஃபிளிப்கார்ட்டில் ஹானர் விழாக்கால விற்பனை

இந்த ஆண்டிறுதி விற்பனையில், இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்டும் களமிறங்கி, தற்போது ஹானர் ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.4 ஆயிரம் வரை முழுமையான தள்ளுபடியை அளிக்கிறது. இந்த முழுமையான தள்ளுபடியை தவிர, கவர்ச்சிகரமான பரிமாற்ற தள்ளுபடிகள், கிரெடிட் கார்டு பண பரிமாற்ற ஈஎம்ஐக்களுக்கு கட்டணம் இல்லை போன்ற வசதிகளையும் ஃபிளிப்கார்ட் தளம் அளிக்கிறது.

இந்த விற்பனையில் இடம் பெற்றுள்ள ஸ்மார்ட்போன்கள் என்று அறியப்பட்ட சிலவற்றை கீழே அளித்துள்ளோம்.

இந்நிறுவனத்தின் முன்னணி ஸ்மார்ட்போனான ஹானர் 8 ப்ரோ குறித்து முதலில் காண்போம். இந்த ஸ்மார்ட்போன் மீது ஃபிளிப்கார்ட் இப்போது ரூ.4 ஆயிரம் தள்ளுபடி வழங்கியுள்ளதால், அதன் உண்மையான விலையான ரூ.29,999-க்கு பதிலாக, ரூ.25,999-க்கு கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பதிலாக வாடிக்கையாளரின் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்து, ரூ.18 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.

நம்புங்கள்.! வெறும் 20 நிமிடங்களில் 100% சார்ஜ், அசத்தும் அப்பல்லோ.!நம்புங்கள்.! வெறும் 20 நிமிடங்களில் 100% சார்ஜ், அசத்தும் அப்பல்லோ.!

இது தவிர, இதை வாங்குபவர்கள் ரூ.149 கூடுதலாக அளித்தால், வாங்குவதற்கான உத்தரவாதத்தைப் பெறலாம். இதன்மூலம் ஒரு ஆண்டிற்குள் வாடிக்கையாளர், ஹானர் 8 ப்ரோவில் இருந்து மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு மாறும் பட்சத்தில், இந்த ஃபோனுக்கு ரூ.12,500 மதிப்பு உறுதியாகப்பெற முடியும்.

அடுத்தபடியாக, ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனுக்கு முழுமையாக ரூ.2 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் அதன் உண்மையான விலையான ரூ.19,999-க்கு பதிலாக, தற்போது ரூ.17,999-க்கு இந்த ஸ்மார்ட்போனைப் பெறலாம். இந்த ஃபோனுக்கு, ரூ.17 ஆயிரம் வரை பரிமாற்ற தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் வழங்குகிறது.

மேலும் அதனுடன் வாடிக்கையாளர் ரூ.149-யைச் செலுத்தி, ஒரு ஆண்டிற்கு மற்றொரு ஸ்மார்ட்போனை மாற்றினால், இதற்கு ரூ.8 ஆயிரம் வரை மதிப்பு உறுதியைப் பெறலாம்.

ஹானர் 6எக்ஸ் (3ஜிபி) வகையின் உண்மையான விலையான ரூ.11,999-க்கு பதிலாக, இப்போது ரூ.9,999-க்கு அளிக்கப்படுகிறது. மேலும் பரிமாற்றத்திற்கு ரூ.9 ஆயிரம் வரை ஃபிளிப்கார்ட் தள்ளுபடி வழங்குகிறது. ஹானர் 6எக்ஸ் (4ஜிபி) வகையின் உண்மையான விலை ரூ.13,999 என்றிருக்க, தற்போது ரூ.11,999-க்கு கிடைக்கிறது. இதற்கு பரிமாற்ற தள்ளுபடியாக ரூ.11 ஆயிரம் வரை ஃபிளிப்கார்ட் அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Flipkart is offering a flat discount of up to Rs 4,000 on Honor smartphones, along with a bunch of other offers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X