Home
News

ஆண்டு இறுதி சலுகைகள் அறிவித்த பிளிப்கார்ட்: ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள்!

பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது ஆண்டு இறுதி சலுகைகளை ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்துள்ளது. இதில் போகோ எக்ஸ் 3, ஐபோன் எக்ஸ்ஆர், மோட்டோ ரேஸர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 வரை தள்ளுபடி

டிசம்பர் 31 வரை தள்ளுபடி

பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் போகோ எக்ஸ் 3, ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எஸ்இ (2020), மோட்டோ ஜி9, மோட்டோரோலா ரேசர் (2019), டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது நேற்றுமுதல் மூன்று நாட்களுக்கு அதாவது நாளை டிசம்பர் 31 வரை கிடைக்கிறது. அதோடு பிளிப்கார்ட் ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்து 10% தள்ளுபடியை வழங்குகிறது. அதோடு விலையில்லா இஎம்ஐ விருப்பங்களும் கிடைக்கிறது.

ஆண்டு இறுதி விற்பனை

ஆண்டு இறுதி விற்பனை

ஆண்டு இறுதி விற்பனையை அறிவிக்க பிளிப்கார்ட் ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டை உருவாக்கியுள்ளது. அதில் போகோ எக்ஸ் 3 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் அறிமுக விலை ரூ.16,999 எனவும் தள்ளுபடி விலை ரூ.15,999-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.18,999 என அறிமுக விலையாகவும் தற்போது ரூ.16,999 எனவும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போகோ சி3 ஸ்மார்ட்போன்

போகோ சி3 ஸ்மார்ட்போன்

போகோ எக்ஸ் 3 மாடலை போலவே போகோ சி3 ஸ்மார்ட்போன் 3 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பு அறிமுக விலை ரூ.7,499 எனவும் தற்போது இதன் விலை ரூ.6,999 ஆகவும் உள்ளது. போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடலின் அறிமுக விலை ரூ.8,999 எனவும் தற்போது ரூ.7,999 ஆகவும் விற்கப்படுகிறது. அதேபோல் போகோ எம் 2 மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு 64 ஜிபி சேமிப்பு ரூ.9,999 எனவும் 128 ஜிபி சேமிப்பு ரூ.10,999 எனவும் விற்கப்படுகிறது.

போகோ எம் 2 ப்ரோ 4ஜிபி + 6 ஜிபி ஸ்டோரேஜ்

போகோ எம் 2 ப்ரோ 4ஜிபி + 6 ஜிபி ஸ்டோரேஜ்

போகோ எம் 2 ப்ரோ 4ஜிபி + 6 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.12,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 6ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,999 எனவும் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.15,999 எனவும் விற்கப்படுகிறது. ஓப்போ ஏ31 (2020) 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.11,490 என இருந்த நிலையில் தற்போது ரூ.10,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ரெனால்ட் 2 எஃப்

ஓப்போ ரெனால்ட் 2 எஃப்

ஓப்போ ரெனால்ட் 2 எஃப் ரூ.16,990 என்ற விலையில் இருந்து பிளிப்கார்ட்டின் மூலம் ரூ.1000 தள்ளுபடி விலையில் பெறலாம். பிளிப்கார்ட் மோட்டோ ஜி மாடலின் அசல் விலை ரூ.11,499-ல் இருந்து ரூ .10,999 என்ற தள்ளுபடி விலையில் பெறலாம். அதேபோல் மோட்டோரோலா ரேஸ்ர் (2019) ரூ.74,999 க்கும் கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் மாடலுக்கு தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் மாடலுக்கு தள்ளுபடி

ரூ.47,900 என்ற விலையில் இருந்த ஐபோன் எக்ஸ்ஆர் பிளிப்கார்ட்டில் ரூ.38,999-க்கு கிடைக்கிறது. ஐபோன் எஸ்இ (2020) விலையை ரூ.39,900 ஆகும் தற்போது இந்த மாடல் பிளிப்கார்ட்டிலிருந்து ரூ.32,999-க்கு பெறலாம். கூடுதலாக, ரூ.79,999 விலையில் ஐபோன் 11 ப்ரோ கிடைக்கிறது. இதே ஐபோன் 11 ப்ரோ அமேசான் மற்றும் பிற ஆன்லைன் சில்லறை தளங்களில் ரூ.89,900-க்கு கிடைக்கிறது. ரூ.8,499 விலையில் இருந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் பிளிப்கார்ட்டில் ரூ.7,999 க்கு கிடைக்கிறது. ஆகஸ்ட் மாதம் ரூ.6,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐடல் விஷன் 1 பிளிப்கார்ட்டில் ரூ.6,299 க்கு கிடைக்கிறது.

உடனடி 10 சதவீத தள்ளுபடி

உடனடி 10 சதவீத தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி எஃப் 41, ஓப்போ ரெனால்ட் 2 எஃப் மற்றும் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ ஆகியவை ரூ.1,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதேபோல் விவோ வி20 ப்ரோ மற்றும் விவோ ஒய்50 போன்ற மாடல்களுக்கு ரூ.2,500 கூடுதல் பரிமாற்ற தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் அல்லது ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு உடனடி 10 சதவீத தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Flipkart announced Year End Sale with Discount on poco x3, iphone xr, moto razr and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X