தள்ளுபடினாலும் ஒருநியாயம் வேணாமா: ரூ.14000 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.8900 மட்டுமே- பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு!
பிளிப்கார்ட் தற்போது மொபைல் பொனான்ஸா விற்பனையை அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து பிளிப்கார்ட் கிரெடிட் கார்டு ஷாப்பிங், இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு உடனடி 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.

பிளிப்கார்ட் மொபைல் பொனான்ஸா
பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த விற்பனையில் ரியல்மி சி12, போக்கோ சி3, போக்கோ எக்ஸ் 3 மற்றும் ஐபோன் 11 உட்பட பல ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த விற்பனை பிப்.,28 வரை நடைபெறுகிறது.

போக்கோ சி3 ஸ்மார்ட்போன்
பிளிப்கார்ட் மொபைல் பொனான்ஸா விற்பனையில் கிடைக்கும் சிறந்த தள்ளுபடி அறிவிப்புகளில் ஒன்று போக்கோ சி3 ஸ்மார்ட்போன். போக்கோ சி3 ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் ஐசிஐசிஐ வங்கி சலுகையாக 10 சதவீதம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,299-க்கு கிடைக்கிறது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்
ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.8499-க்கு கிடைக்கிறது. ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் ஐசிஐசிஐ வங்கி சலுகை மூலம் வாங்கும்போது ரூ.7650-க்கு கிடைக்கிறது.

போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்
முதன்மை ரக அம்சங்கள் கொண்ட போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தள்ளுபடி அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,499-க்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ சலுகையோடு இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.14,499-க்கு வாங்கலாம்.

ரியல்மி 7 ஸ்மார்ட்போன்
64 எம்பி கேமரா, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 8ஜிபி ரேம் அம்சம் கொண்ட ரியல்மி 7 ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.17,999-க்கு விற்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் ரூ.13,999-க்கு வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி சலுகையோடு இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.12,999-க்கு கிடைக்கும்.

ஐபோன் 11 தள்ளுபடி விலையில்
ஐபோன் 11 ரூ.54,900 என்ற விலையில் இருந்த நிலையில் தற்போது சலுகை விற்பனையாக ரூ.49,999-க்கு கிடைக்கிறது. அதோடு ஐசிஐசிஐ வங்கி சலுகை மூலம் வாங்கும்போது ரூ.48,999-க்கு கிடைக்கும். சிறந்த சக்திவாய்ந்த கேமிங் சாதனமான ஆர்ஓஜி போன்3 ரூ.55,999-க்கு விற்கப்பட்டது. தற்போது சலுகை விலையில் ரூ.43,999-க்கும் ஐசிஐசிஐ வங்கி சலுகை மூலம் வாங்கும்போது ரூ.42,999-க்கும் கிடைக்கும்.

எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்
கூகுள் பிக்சல் 4ஏ சாதனம் ரூ.31,999-க்கு கிடைக்கிறது. அதோடு ஐசிஐசிஐ வங்கி சலுகை மூலம் பிக்சல் 4ஏ வாங்கும் போது இந்த சாதனம் ரூ.30,999-க்கு கிடைக்கிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.14,000-க்கு விற்கப்பட்டது. தற்போது இந்த சாதனம் ரூ.8,990 என்ற மிக குறைந்த விலையிலும் ஐசிஐசிஐ வங்கி சலுகையோடு வாங்கும் போது ரூ.8091-க்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications