இனி ரொம்ப வலுவா இருப்போம்: அதானி குழுமத்துடன் பிளிப்கார்ட் கூட்டு- அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

|

உள்நாட்டு இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அதானி குழுமத்துடன் மூலோபாய மற்றும் வணிக கூட்டாட்சியை அறிவித்துள்ளது. மேலும் மும்பை நகரில் சுமார் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய பூர்த்தி மையம் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்

உள்நாட்டு இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்

இந்தியாவின் உள்நாட்டு இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் கடந்த திங்கட்கிழமை அதானி குழுமத்துடன் வணிக கூட்டமைப்பை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பிளிப்கார்ட் நிறுவனம்

பிளிப்கார்ட் நிறுவனம்

பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது சப்ளை சங்கிலிக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கான சேவை திறனை மேம்படுத்தவும் அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் உடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்

அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்

பிளிப்கார்ட் நிறுவனம் அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் உடன் கூட்டுவைத்து இணைந்து செயல்படும் என அதானி குழுமம் ஒழுங்குமுறை தாக்கலில் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டாட்சியின் ஒரு நடவடிக்கையாக அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் மும்பை நகரில் தளவாட மையம் ஒன்றை அமைக்க உள்ளது. அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் மும்பையில் சுமார் 5 லட்சுத்து 34 ஆயிரம் சதுர அடியில் பூர்த்தி மையத்தை அமைக்க இருக்கிறது. இந்த நடவடிக்கையானது இந்தியாவின் மேற்கு பகுதிகளில் அதிகரித்து வரும் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் அம்சத்தை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

10 மில்லியன் யூனிட் விற்பனையாளர்களின் சரக்குகள்

10 மில்லியன் யூனிட் விற்பனையாளர்களின் சரக்குகள்

அமைக்கப்பட இருக்கும் இந்த பூர்த்தி மையமானது 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மையத்தின் அம்சமானது அனைத்து சமயத்திலும் 10 மில்லியன் யூனிட் விற்பனையாளர்களின் சரக்குகளை வைத்திருக்கும் திறனோடு இருக்கும் என கூறப்படுகிறது.

அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

இத்தனை லட்ச சதுரஅடியில் அமைக்கப்படும் பூர்த்தி மையத்தின் மூலம் எம்எஸ்எம்இ மற்றும் விற்பனையாளர்களின் விநியோக சங்கிலி கட்டமைப்பு வலுப்படுத்துவோது மட்டுமின்றி இதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இந்த மையத்தின் மூலம் 2500 நேரடி பணியிடமும், ஆயிரக்கணக்கான மறைமுக வேலைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு உள்நாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு

இரண்டு உள்நாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு

இரண்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் கூட்டமைப்பு குறித்து ஏபிஎஸ்இஇசட்-ன் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி கூறுகையில், இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு வணிக நிறுவனங்களும் ஒன்றிணைந்து சிறந்த சிலவைகளை உருவாக்க உதவும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் உள்நாட்டு தேவைக்கான முக்கிய மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பான சிறந்த ஆத்மநிர்பாரத் இதுதான் எனவும் கூறினார்.

தனித்துவமான வணிக மாதிரி அம்சம்

தனித்துவமான வணிக மாதிரி அம்சம்

இந்த பரந்த கூட்டாண்மையானது தனித்துவமான வணிக மாதிரியை அமைக்கும் எனவும் டிஜிட்டல் தளமான பிளிப்கார்ட்டின் உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சிறந்த வாய்ப்பாக இதை கருதுவதாகவும் கரண் அதானி குறிப்பிட்டார். ஆன்லைன் வணிகத்தில் பிளிப்கார்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இந்த சேவை மூலம் தொழில்நுட்ப கண்டறிதலும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளுதலும் நடக்கும் எனவும் பரஸ்பர பலங்களை மேம்படுத்தவதில் கவனம் செலுத்துவதன் மூலம் நீண்ட, பயனுள்ள கூட்டாட்சியை பெறமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

அதேபோல் இதுகுறித்து பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், அதானி குழுமம் இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவதில் தவிர்க்கமுடியாதவை, இந்த விநியோக சங்கிலி மூலம் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.

Best Mobiles in India

English summary
Flipkart Announced its commercial partnership with Adani Group: Enhance Supply and Local Employment

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X