இந்தியாவின் முதல் RRTS ரயில்.. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம்! முதலில் இங்கு தான் வரப்போகிறது!

|

இந்தியாவின் முதல் ஆர்.ஆர்.டி.எஸ் (Rapid Rail Transit System-RRTS) ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் எந்த பகுதியில் முதலில் களமிறங்கும் என்பது போன்ற தகவல் எல்லாம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த புதிய ரயில் எப்படி உருவாக்கப்படுகிறது? எங்கு உருவாக்கப்படுகிறது? இதன் சிறப்பு என்ன? என்பது போன்ற முழு தகவலையும் இங்கே பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் RRTS ரயில்

இந்தியாவின் முதல் RRTS ரயில்

இந்தியாவின் முதல் RRTS ரயில், டெல்லி-மீரட் இடையில் இயங்க உள்ளது. சரியாக சொன்னால், டெல்லி-காஜியாபாத்-மீரட் இடையிலான ஓடுபாதையில் மணிக்கு சுமார் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. RRTS ரயிலின் முதல் தோற்றத்தை இந்த அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. இதன் வடிவமைப்பு டெல்லியின் சின்னமான தாமரை கோயிலால் ஈர்க்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா கொள்கை

மேக் இன் இந்தியா கொள்கை

இந்த RRTS ரயில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா' கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. RRTS ரயிலின் முழு வடிவமைப்பும் குஜராத்தில் உள்ள பாம்பார்டியரின் சாவ்லி ஆலையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிலையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட பசுமை ரயில் ஆகும். ரேடியேட்டிங் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வெளிப்புற உடலுடன், ஏரோடைனமிக் RRTS ரயில்கள் இலகுரக மற்றும் முழுமையாக குளிரூட்டப்பட்டதாக இருக்கும்.

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

ஆட்டோமேட்டிக் பிளக்-இன் வகை கதவுகள்

ஆட்டோமேட்டிக் பிளக்-இன் வகை கதவுகள்

RRTS ரயிலில் உள்ள ஒவ்வொரு காரிலும் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று கதவுகள் என்று மொத்தம் ஆறு தானியங்கி பிளக்-இன் வகை கதவுகள் இருக்கும், அதேபோல் ரயிலின் வணிக வகுப்பில் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு கதவுகள் என்று மொத்தம் நான்கு கதவுகள் இருக்கும், உள் நுழைதல் மற்றும் வெளியேற எளிதானதாக இந்த கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி முதல் வைஃபை வரை

சிசிடிவி முதல் வைஃபை வரை

RRTS ரயில்களில் 2x2 இருக்கை கொண்ட அகலமான பயணிகள் இடம், கிராப் ஹேண்டில்கள், கிராப் கம்பங்கள் என நின்று பயணிக்கும் பயணிகளுக்கு வசதி, சிசிடிவி கண்காணிப்பு, ஓவர்ஹெட் லக்கேஜ் ரேக், மொபைல் / லேப்டாப் சார்ஜிங் போர்ட்கள் மற்றும் ஆன்-போர்டு WiFi ஆகிய பல அம்சங்கள் கொண்ட நவீனமயான ரயிலாக இந்த புதிய RRTS ரயில் உருவாக்கப்படுகிறது.

உஷார்! ஆன்லைன் லோன் எடுத்த பெண்! மொபைலுக்கு வந்த அவரின் 'அந்த' புகைப்படம்!

எவ்வளவு பயணிகள் பயணிக்க முடியும்?

எவ்வளவு பயணிகள் பயணிக்க முடியும்?

புதிய ரயில்களில் மீரட் உள்ளூர் போக்குவரத்து சேவைகளுக்கான மூன்று கார் ரயில் கட்டமைப்பில் சுமார் 900 பயணிகள் பயணிக்க முடியும். அதேபோல், இந்த ரயில் ஆறு கார் ரயில்களில் கட்டமைக்கப்படும் போது, டெல்லி மற்றும் மீரட் இடையே 1,790 பயணிகள் பயணிக்க முடியும். அதேபோல், RRTS ரயில்களை ஒன்பது கார் ரயில்களாக விரிவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

RRTS ரயிலின் முன்மாதிரி 2022 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும், மேலும் இது விரிவான சோதனைகளுக்குப் பிறகு பொது பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். மீரட்டில் உள்ளூர் போக்குவரத்து சேவைகளை இயக்குவதற்காக என்.சி.ஆர்.டி.சி ஓடுபாதையில் பிராந்திய ரயில் சேவைகளை இயக்க தலா 6 கார்கள் கொண்ட 30 ரயில் பெட்டிகளையும், தலா 3 கார்கள் கொண்ட 10 RRTS ரயில் பெட்டிகளையும் NCRTC வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Flight-like facilities, 180 km/per hour speed: Design of India's first rapid train unveiled : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X