ரிலையன்ஸ் ஜியோ சுவாரஸ்ய தகவல்கள் : இது யாருக்கும் தெரியாது பாஸ்.!

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியானது இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலை என்ற ஒற்றை அம்சம் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ விலை மற்றும் டேட்டா கட்டணங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ குறித்து யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

தொழில் முனைவோர்:

தொழில் முனைவோர்:

புது நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருடன் இணைந்து பணியாற்ற இருக்கின்றது. இதன் மூலம் இளைய தலைமுறையினர் வியாபார ரீதியாக வெற்றியடைவதோடு அவர்களை ஊக்குவிக்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

ஐபிஎஸ்எல்:

ஐபிஎஸ்எல்:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்ஃபோடெக் பிராட்பேன்ட் சர்வீசஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் சுமார் 96 சதவீத பங்குகளை ஜூன் 2010 ஆம் ஆண்டு வாங்கியது. ரூ.4800 கோடி மதிப்புடைய இந்நிறுவனம் இந்தியாவின் 22 மண்டலங்களிலும் பிராட்பேன்ட் சேவைகளை கைப்பற்றியது. பின் ஜனவரி 2013 ஆம் ஆண்டு இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டெட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

அறிமுகம்

அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் 2015 ஆம் ஆண்டின் அரையிறுதி காலகட்டத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும் 2015 டிசம்பர் 27 ஆம் தேதி பீட்டா அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற இவ்விழாவில் ஷாருக் கான் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முதலில் ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்த வழங்கப்பட்ட ஜியோ சேவைகள் தற்சமயம் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள்

இளைஞர்கள்

இந்தியாவின் தலைசிறந்த சேவையை வழங்க ஜியோ கிட்டத்தட்ட 60,000 இளம் ஊழியர்களுடன் பணியாற்றி வருகின்றது. சராசரி ஜியோ ஊழியரின் வயது 30 எனக் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச இளைய சமூகம் பணியாற்றும் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையை ஆக்கிரமிக்கத் தயாராகி விட்டது என்றே கூறலாம்.

எல்டிஇ தொழில்நுட்பம்

எல்டிஇ தொழில்நுட்பம்

தற்சமயம் எல்டிஇ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், இனி வரும் காலங்களில் இந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட மாட்டாது என்பதால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்டெக்ஸ் நிறுவனத்துடன் 2015 ஆம் ஆண்டு இணைந்து வாய்ஸ் ஓவர் எல்டிஇ தொழில்நுட்பம் கொண்ட 4ஜி கருவிகளை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதோடு லைஃப் பிரான்டு கொண்ட பல்வேறு ஸ்மார்ட்போன் கருவிகள் ஜனவரி 2016 முதல் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

Best Mobiles in India

English summary
Five Things you did not know about Reliance Jio Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X